தமிழகத்தில் இன்று
பிஜியில் ஒரு வாரத்தில் இடைக்கால அரசு - ராணுவம் அறிவிப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:
புரட்சியின் காரணமாக அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்துள்ள பிஜி நாட்டில் அடுத்தஒரு வாரத்துக்குள் ஜனநாயக ரீதியில் அடுத்த ஒரு வாரத்துக்குள் புதிய இடைக்காலஅரசு ஏற்படுத்தப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
பிஜியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிப் படையினர்கடந்த மே 19-ம் தேதி பிஜி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில்பிரதமர் மகேந்திர செளத்ரி, அமைச்சர்கள் உள்ளிட்ட பலரைப் பிணைக் கைதிகளாகப்பிடித்து வைத்துக் கொண்டனர்.
புரட்சிக்குப் பிறகு பிஜியில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. புரட்சிப் படையினருடன்ராணுவம் பேச்சு நடத்தியது. அதன் பலனாக, பிரதமர் உள்பட 27 பேர் தவிரமற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பிஜியில் பிஜியைச் சேர்ந்த ஒருவர்தலைமையில் ஜனநாயக ஆட்சி ஏற்படும் வரை பிணைக் கைதிகளைவிடுவிக்கமாட்டோம் என்று புரட்சிப் படையினர் கூறிவிட்டனர்.
இதையடுத்து அடுத்த 2 ஆண்டுகளுக்குத் தனது ஆட்சி தொடரும் என்று அறிவித்தராணுவம், பிணைக் கைதிகளை விடுவித்து ஆயுதங்களை ஒப்படைக்கும்படி புரட்சிப்படையினருக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்தது. அந்த காலக்கெடு இன்றுடன்முடிவடைகிறது. ராணுவத்தின் கெடுவை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று புரட்சிப்படையினரின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் அறிவித்தார்.
இந் நிலையில், அடுத்த ஒரு வாரத்தில் பிஜியில் ஜனநாயக ரீதியில் புதிய இடைக்காலஅரசு ஏற்படுத்தப்படும் என்றும் ராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. நாட்டின்பொருளாதாரத்தை நிலைநாட்டவும், அடுத்த இரு ஆண்டுக்குள் பொதுத் தேர்தல்நடத்தவும் இந் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக ராணுவ ஆட்சியாளர்கள்கூறியுள்ளனர்.
பிரதமர் மகேந்திர செளத்ரியும் மற்ற 26 அரசியல் பிணைக் கைதிகளும்விடுவிக்கப்படும் வரை பிஜியில் தங்களது ஆட்சி தொடரும். அடுத்த ஓராண்டுக்கானஇடைக்கால அரசில் அமைச்சர்களைத் தேர்வு செய்வதில் எந்த கட்டுப்பாடுகளும்இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, புரட்சிக்காரர்களுக்கு ராணுவம் கொடுத்த காலக்கெடு முடிவடையஉள்ளதை அடுத்தும் தலைநகர் சுவாவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதைஅடுத்தும், பிஜி முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுவாவில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ராணுவத்தினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணயில்ஈடுபட்டுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications