தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மெல்ல மெல்லத்தான் தனியார்மயம் - மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கை மெதுவாகவேமேற்கொள்ளப்படும். அவசர கதியில் அந் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்றுமத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

புதிய பொருளாதாரக் கொள்கையின்படி அரசுத் துறை நிறுவனங்களில் தனியார்களைஈடுபடுத்துவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி ஏர் இந்தியாஉள்பட சில நிறுவனங்களில் தனியார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தனியார்மயமாக்கப்பட்டாலும், அந்தந்த நிறுவனங்கள் முழுவதும் தனியார்களிடம்ஒப்படைக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட சதவீதத்துக்கு மட்டுமே தனியார்களிடம்அந் நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. மற்றபடி அந் நிறுவனத்தின்செயல்பாடு மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.

அந்த வகையில், அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைமெதுவாகத்தான் மேற்கொள்ளப்படும். எடுத்தவுடனேயே பெரிய அளவில் இத்தகையநடவடிக்கையே மேற்கொள்ள மத்தியஅரசு விரும்பவில்லை என்று அருண் ஜேட்லிகூறியுள்ளார்.

வெகு விரைவில் வி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். நிறுவனங்கள்தனியார்மயமாக்கப்படும். அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, அரசுநிறுவனங்களில் மத்திய அரசு முதலீடு செய்துள்ள முதலீட்டைத் திரும்பப் பெறுவதுபோன்ற எந்த விஷயமானாலும் அது பற்றி மத்திய அரசு முழுமையாக ஆராய்ந்துமுன்னுரிமை கொடுத்து முடிவு எடுக்கும்.

சரியான நேரம் வந்தால் பெரிய அளவிலும், முழுமையாகவும் தனியார்மயமாக்கல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுவரை, மெதுவாகவே இந் நடவடிக்கைமேற்கொள்ளப்படும். தற்போதைய காலகட்டத்தில் இதுவே சிறந்தது என்ற மத்தியஅரசு கருதுகிறது.

அரசு நிர்வகித்து வரும் 17 பொதுத் துறை நிறுவனங்களை இந்த நிதி ஆண்டுக்குள்தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசகர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆராய்ந்து முடிவு எடுத்து நிறுவனங்களைஎவ்வாறு தனியார்மயமாக்குவது என்று அரசுக்கு ஆலோசனை கூறுவார்கள்.

அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத்தெரிவிக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனங்கள்எவ்வளவு சிறப்பாகச் செயல்படப்போகின்றன என்பதை பொறுத்திருந்துபார்க்கவேண்டும்.

நலிவடைந்த நிறுவனங்கள்தான் தனியார்மயமாக்கப்படுகின்றன. அவை மீண்டும்நல்லபடி இயங்கவேண்டும், நாட்டின் பொருளாதாரம் மேம்படவேண்டும் என்றஎண்ணத்தில் நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன என்றார் அருண் ஜேட்லி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+