அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
சென்னையில் ஆசியாவின் மிகப்பெரிய "சாப்ட்வேர் பார்க்":
ஜூலை 4-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஆசியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா (டைடல் பார்க்), ரூ.338 கோடி செலவில் சென்னை தரமணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதைபிரதமர் வாஜ்பாய் ஜூலை 4-ம் தேதி திறந்து வைக்கிறார்.
15 ஏக்கரில் சுமார் 12 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இப் பூங்கா குறித்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும்நிர்வாக இயக்குநர் ஆர். கோபால் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜூலை 4-ம் தேதி நடைபெறும் துவக்க விழாவில் தமிழக முதல்வர் மு. கருணாநிதியும் கலந்து கொள்கிறார்.
பூங்காவின் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் வங்கிகள், கடைகள், ஹோட்டல்கள், கலந்தாய்வுக் கூடங்கள், வணிக மையங்கள் ஆகியவை இருக்கும்.இரண்டாவது தளம் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா சொலியூஷன், டாடா கன்சல்டன்சி, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகியவை ஏற்கனவேதங்கள் அலுவலகங்களை அங்கே நிறுவியுள்ளன.
இப் பூங்காவின் 70 சதவீத இடம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. 30 சதவீத இடம் பல்வேறு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுவிட்டது. குறைந்தபட்சம் 4ஆயிரம் சதுர அடி முதல் அதிகபட்சம் 90 ஆயிரம் சதுர அடி வரை பரப்பளவில் அலுவலகங்களை இங்கு நிறுவமுடியும்.
திட்ட முதலீடு அதிகமாகாமல் குறிப்பிட்ட காலத்துக்கு 12 வாரங்களுக்கு முன்பே இப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பப் பூங்காவில் உலகிலேயே 3-வது பெரிய அளவில் நவீன குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வி.எஸ்.என்.எல், மற்றும்தொலைத் தொடர்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடர் மின் இணைப்புக்காக இப் பூங்காவுக்கென தனியாக 110 கிலோவாட் மின் சக்தி திறன் கொண்ட சப்ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பப் பூங்காவின் மற்றொரு சிறப்பு, ஒரு மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒரே தொழில்நுட்பப் பூங்கா இதுதான். மேலும், சென்னைவிமான நிலையத்திலிருந்து 20 நிமிடங்களில் இங்கு வந்து சேரமுடியும் என்றார் கோபால்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications