ஈரோ 2000 கால்பந்து - இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது பிரான்ஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பிரஸ்ஸல்ஸ்:
ஈரோ 2000 கால்பந்துக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் விளையாட உலக சாம்பியன்பிரான்ஸ் தகுதி பெற்றது.
புதன்கிழமை பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் போர்சுகல்லை2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் தோற்கடித்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் போர்ச்சுகல் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.அதன் பிறகு பிரான்ஸ் தனது ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது. இருப்பினும், முதல்பாதியில் அதனால் கோல் போட முடியவில்லை.
இரண்டாவது ஆட்டத்தில் தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கிய பிரான்ஸ் ஒரு கோல்அடித்து சமன் செய்தது. அதன் பிறகு அணிகளும் கோல் போட கிடைத்த பலவாய்ப்புகளை வீணாக்கின.
ஆட்டம் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில்இருந்ததால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் முதல் பாதி கோல்எதுவும் விழவில்லை. இரண்டாவது பாதியில் போர்ச்சுகல் அணி வீரர் செய்த தவறால்பிரான்ஸுக்கு பெனால்டி வாய்ப்பளிக்கப்பட்டது.
1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற பிரேஸிலுக்கு எதிரான உலகக் கோப்பைக்கால்பந்து இறுதிஆட்டத்தில் முதல் இரு கோல்களை அடித்து பிரான்ஸுக்கு வெற்றிதேடித் தந்த ஸினேடின் ஸிடேன், பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல்போட்டார்.
இதையடுத்து 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதிஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.
இத்தாலிக்கும் ஹாலந்துக்கும் இடையே இரண்டாவது அரையிறுதி ஆட்டம்ஆம்ஸ்டர்டாமில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இறுதி ஆட்டம் ஜூலை 2-ம் தேதி ராட்டர்டாமில் நடைபெற உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications