For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பிஜி: புரட்சிக்காரர்களுக்கு சாப்பாடு, குடிநீர் "கட் - ராணுவம் முடிவு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:

பிடித்து வைத்துள்ள பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 27 பிணைக் கைதிகளையும் விடுவிக்க மறுத்துவிட்டபுரட்சிக்காரர்களுக்கு சாப்பாடு, குடிநீர் சப்ளையை நிறுத்துவிட ராணுவம் முடிவு செய்துள்ளது.

பிஜியில் கடந்த மே 19-ம் தேதி புரட்சி ஏற்பட்டது. பிஜியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலானபுரட்சிப் படையினர் பிஜி நாடாளுமன்றத்துக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து பிரதமர் மகேந்திர சவுத்ரி,அமைச்சர்கள் உள்பட பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.

பின்னர் பிஜியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கு ராணுவத்தின் கையில் ஆட்சி வந்தது. புரட்சிப் படையினருக்கும்,ராணுவத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பலனாக பிணைக் கைதிகளில் பலர்விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 27 பேர் புரட்சிக்காரர்கள் பிடியில் உள்ளனர்.

பிஜியில் பிஜியைச் சேர்ந்த ஒருவர் தலைமையில் புதிய ஆட்சி ஏற்படும் வரை பிணைக் கைதிகளைவிடுவிக்கமாட்டோம் என்று புரட்சிக்காரர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து பிஜியில் அடுத்த இரண்டுஆண்டுகளுக்குத் தனது ஆட்சி தொடரும் என்று அறிவித்த ராணுவம், புரட்சிக்காரர்கள் சரணடைய 24 மணி நேரம்கெடு விதித்தது.

கெடு புதன்கிழமை பிற்பகலுடன் முடிவடைந்தாலும், பிணைக் கைதிகளைப் புரட்சிக்காரர்கள் விடுவிக்கவில்லை.எதையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக புரட்சிப் படைத் தலைவர் ஸ்பீட் அறிவித்துவிட்டார்.

இந் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஒருவார காலத்தில் ஜனநாயகரீதியில் புதிய இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று ராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, தங்களது உத்தரவை மதிக்காத புரட்சிக்காரர்களை தனிமைப்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.தற்போது அவர்கள் இருக்கும் நாடாளுமன்ற கட்டடத்தைத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக ராணுவம் அறிவிக்கஉள்ளது.

புரட்சிக்காரர்களுக்கு உணவு, குடிநீர் சப்ளையை நிறுத்துவதுடன் நாடாளுமன்றக் கட்டடத்துக்கான மின்இணைப்பைத் துண்டிக்கவும் ராணுவம் முடிவு செய்துள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹோவர்டுபோலிடினி தெரிவித்தார்.

இதுவரை தனது அதிகாரத்தை ராணுவம் பயன்படுத்தவில்லை. இனிமேலும் ராணுவம் தனது அதிகாரத்தைப்பயன்படுத்தாமல் இருப்பது புரட்சிக்காரர்களின் கையில்தான் உள்ளது என்றார் அவர்.

பிஜியில் ஏற்பட்டள்ள இப் பிரச்சினையால் அந் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.நாட்டின் முக்கிய உற்பத்தியான சர்க்கரை உற்பத்தி தடைபட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுவிட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X