தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

-கட்-சி மாறி-ய ம-து-ரை எம்.எல்.ஏவின் பதவி --ரத்-து

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:

திமுக வில் இருந்து அதிமுக வுக்கு பல்டி அடித்த எம்எல்ஏ முத்துராமலிங்கத்தின் பதவி ரத்து செய்யப்பட்டது. அவரது பதவி ரத்து செய்யப்பட்டதாக சபாநாயகர்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அறிவித்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் முத்துராமலிங்கம்.

கடந்த 1996 ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை இவர் திமுக வில் இருந்து விலகினார். சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் சேர்ந்ததாக அறிவித்தார்.

பதவி ரத்து:
முத்துராமலிங்கம் இவ்வாறு கட்சி மாறி விட்டதால் அவரது எம்எல்ஏ பதவி ரத்து ஆகி விட்டதாக சபாநாயகர் பிடிஆர்.பழனிவேல்ராஜன்அறிவித்தார்.

முத்துராமலிங்கம் கட்சி மாறிவிட்டதால் அவர் தானாகவே பதவி இழந்து விட்டார். கட்சித் தாவல் சட்டம் 10 வது விதியின்படி அவரது எம்எல்ஏபதவி ரத்து ஆகிவிடும்.

அதிமுக வில் சேர்ந்து விட்டதாக அவரே அறிவித்துள்ளார். பத்திரிக்கைகளிலும், டெலிவிஷன்களிலும் அவர் அதிமுகவில் சேர்ந்துவிட்டதாக அறிவித்ததாகசெய்திகள் வந்துள்ளது.

இவ்வாறு சபாநாயகர் பிடிஆர்.பழனிவேல்ராஜன் தெரிவித்தார்.

எம்எல்ஏ பதவி ராஜினாமா:

இதற்கிடையே முத்துராமலிங்கம் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவர் இதுகுறித்து சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

1996 ம் ஆண்டிலிருந்து நான் திமுக எம்எல்ஏ ஆக இருந்து வருகிறேன். திமுக கட்சியின் சீர்கேடுகளினாலும், திமுக எம்எல்ஏ பதவியைஅவமானப்படுத்துவதாலும் நான் அக்கட்சியிலிருந்து பிரிந்து அதிமுக வில் இணைகிறேன்.

தற்போது எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் பிடிஆர். பழனிவேல் ராஜனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற