தமிழகத்தில் இன்று
உத்தரப்பிரதேசத்தில் ரூ.5000 கோடிக்கு வர்த்தக வரி ஏய்ப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லக்னெள:
உத்தரப்பிரதேசத்தில் ஆண்டுதோறும் ரூ.5000 கோடி அளவுக்கு வர்த்தக வரி ஏய்ப்புநடப்பதாக அம் மாநில அமைப்புகளுக்கான நிதித்துறை அமைச்சர் அமர்மணி திரிபாதிதெரிவித்தார்.
லக்னெளவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உத்திரப்பிரதேசத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூ.5000 கோடி அளவுக்கு வர்த்தகவரி ஏய்ப்பு நடக்கிறது.
ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.இதைக் கண்காணிக்கவும் வரி ஏய்ப்பைத் தடுக்கவும் பார்ம் 49அறிமுகப்படுத்தப்படும். சரக்குக் கட்டணம் மீது கூடுதல் வரி விதிக்கும் எண்ணம்இப்போதைக்கு இல்லை.
பார்ம் 49 அறிமுகப்படுத்தப்படுத்துவதற்கு வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.வர்த்தகர்களை பிரச்சினைக்குள்ளாக்கவேண்டும் என்பதற்காக பார்ம் 49அறிமுகப்படுத்தப்படவில்லை. சட்டவிரோதமாக தொழில், வர்த்தக நடவடிக்கைகளில்ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கவே இந்த முயற்சி என்பதை வர்த்தகர்கள்உணரவேண்டும் என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications