கிரிக்கெட்டைப் புறக்கணித்த அர்ஜூனா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
விளையாட்டுக்கான அர்ஜூனா விருதுகள் வரலாற்றிலேயே, முதல் முறையாக கிரிக்கெட் முதல் முறையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்வீரர்கள் யாருக்கும் விருது வழங்கப்படவில்லை.
அர்ஜுனா விருது 24 பேருக்கு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. பெருமை மிகு அர்ஜுனாவிருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கான பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இல்லை.
கடந்த ஆண்டு வரை கிரிக்கெட் வீரர்கள் ஒருவராவது விருது பெற்று வந்தனர். ஆனால், முதன்முறையாக இந்த ஆண்டுதான் கிரிக்கெட் வீரர்கள் யாரும்தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக லஞ்சம், மேட்ச் பிக்ஸிங் என பல வகையான குற்றச்சாட்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் ஆளாகியுள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பாகமத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு வரை 34 கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தின்சாவெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு எந்த கிரிக்கெட் வீரர்களின் பெயரையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், மாநில கிரிக்கெட்வாரியங்களும் பரிந்துரைக்கவில்லை. மேலும், ஏதாவது கிரிக்கெட் வீரரின் பெயரைப் பரிந்துரைக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்தையோ, மாநில கிரிக்கெட் வாரியத்தையோ அல்லது தனி நபர்களையோ மத்திய அரசு நிர்பந்திக்க முடியாது.
ஆகவே, இந்த ஆண்டு கிரிக்கெட் வீரர்கள் யாரும் அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்படவில்லை. வீரர் மற்றும் வீராங்கனைகள் அவர்களதுதிறமையின் அடிப்படையில்தான் அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார் அமைச்சர் தின்சா.
8 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருது, 3 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியார் விருது உள்பட 24 பேருக்கு அர்ஜுனா விருதுவழங்கப்படுகிறது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளைக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் பெயர் விவரம்:
ராஜீவ் காந்தி கேல் ரத்னா:
தன்ராஜ் பிள்ளை (ஹாக்கி).
துரோணாச்சாரியார் விருது
கென்னத் ஓன் போஸன் (அதலெடிக்ஸ்), ஹவா சிங் (குத்துச்சண்டை), அஜய் சிரோஹி (பளுதூக்குதல்).
வாழ்நாள் சாதனையாளருக்கான விருது:
வி.ஜெ. பிலிப்ஸ் (ஹாக்கி), பிரதுமான் சிங் (அதலெடிக்ஸ்), சாஜன் சிங் சீமா (கூடைப்பந்து), பல்பீர் சிங் குல்லார் (ஹாக்கி), ஹரிபால் கெளசிக் (ஹாக்கி), திராத்ராஜ் (கபாடி), பல்வீந்தர் சிங் (கபாடி), அசோக் குமார் (மல்யுத்தம்).
உடல் ஊனமுற்றோருக்கான பிரிவு:
வெங்கட ரப்பா (அதலெடிக்ஸ்).
அர்ஜுனா விருது:
குலாப் சந்த் (அதலெடிக்ஸ்), சுனிதா ராணி (அதலெடிக்ஸ்), குர்மீத் கெளர் (அதலெடிக்ஸ்), புல்லேலா கோபிசந்த் (பாட்மிண்டன்), குர்சரண் சிங் (குத்துச்சண்டை), ஜிதேந்தர்குமார் (குத்துச்சண்டை), ரமன்தீப் சிங் (ஹாக்கி), ஜக்ஜித் சிங் (துடுப்புப் படகுப் போட்டி), விவேக் சிங் (துப்பாக்கி சுடுதல்), நிஷா மில்லெட் (நீச்சல்), ஆஷிம்மோங்கியா (படகுப் போட்டி), சிரஞ்சீவ் மில்கா சிங் (கோல்ஃப்).
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறுபவருக்கு ரூ.3 லட்சமும், துரோணாச்சாரியா விருது பெறுபவருக்கு ரூ.2.25 லட்சமும், அர்ஜுனா விருதுபெறுபவருக்கு ரூ.1.5 லட்சமும் பணமுடிப்பு வழங்கப்படும்.
ஜனாதிபதி மாளிகையில் ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெறும் விழாவில் இவ் விருதுகளை ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் வழங்குகிறார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications