ஈரோ-2000 கால்பந்து: ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டம் - பிரான்ஸ், இத்தாலி மோதல்
ராட்டர்டாம்:
ஈரோ 2000 கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் ஹாலந்தில் உள்ளராட்டர்டாம் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதில் நடப்பு உலக சாம்பியன் பிரான்ஸும், முன்னாள் உலக சாம்பியன் இத்தாலியும்மோதுகின்றன.
அரையிறுதியில் போர்சுகல்லை 2-1 என்றகோல் கணக்கில் பிரான்ஸும், ஹாலந்தை3-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியும் தோற்கடித்து இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றன.
அரையிறுதியில் இரு அணிகளும் பலத்த சவாலைச் சமாளித்தன என்பதுகுறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஹாலந்திடம் தோற்கும் நிலையில் இருந்தது இத்தாலி.ஆட்டத்தின் இரு பாதியிலும் கிடைத்த அருமையான பெனால்டி வாய்ப்புகளைஹாலந்து கோட்டை விட்டதால், இறுதியில் டை பிரேக்கர் மூலம் வெற்றியைைப்பெற்றது இத்தாலி.
மற்றபடி ஆட்டம் முழுவதும் ஹாலந்திடம் தான் இருந்தது. இதே ஆட்டத்தைபிரான்ஸிடம் விளையாடினால் இத்தாலி வெற்றி பெறுவது கடினம்.
அதேபோல் பிரான்ஸும், அரையிறுதியில் போர்சுகல்லிடம் பெரும் சவாலைச்சமாளிக்க வேண்டியிருந்தது. முதலில் கோல் போட்டி போர்ச்சுகல் முன்னிலை பெற்றது.பின்னர் இதை இரண்டாவது பாதியில் சமன் செய்த, கூடுதல் நேரத்தில் கிடைத்தபெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி 2-வது கோல் அடித்து வெற்றி பெற்றது.
மற்றபடி அந்த ஆட்டத்திலும் போர்சுகல்லின் ஆட்டமே மேலோங்கி இருந்தது.
பிரான்ஸும், இத்தாலியும் ஏறக்குறைய அதிர்ஷ்டத்தின் துணையால்தான் இறுதிஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளன.
பிரான்ஸின் ஸினேடின் ஸிடேன், இத்தாலியின் ஆல்பர்டினி இருவருடைய ஆட்டத்தைவைத்துத் தான் அந்த அணியின் வெற்றி தோல்வி உள்ளது.
கால்பந்து கணிப்பாளர்கள் கணிப்புப் படி பிரான்ஸுக்குத்தான் கோப்பையைவெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பிரான்ஸ் கோப்பையை வென்றால் அது புதியசாதனையாகும்.
உலகக் கோப்பையை வென்ற அணி ஈரோ கால்பந்துக் கோப்பையையும் ஒரேநேரத்தில் இதுவரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோ 2000கோப்பையை பிரான்ஸ் வெல்லும் பட்சத்தில் அது புதிய சாதனை படைக்கும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications