For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

"-ஒ-ருத்-த-ரை--யும் விடா-தே": இ-து ஜெய-ல-லி-தா--வின் கட்-ட-ளை

சென்னை:

ஒருத்தரையும் விடாதீர்கள். எல்லோருக்கும் வாக்காளர் அடையாள அட்டையை வாங்கிக் கொடுங்கள் என்று கட்சியினருக்குஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.

இது குறித்து சென்னையில் சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

வாக்காளர்களுக்குப் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்கும் பணியைத் தேர்தல் ஆணையம் விரைவில் தொடங்கஉள்ளது. அதி-முகவினர் அனைவரும் இந்தப் பணியில் தீவிர ஆர்வம் காட்ட வேண்டும்.

வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மா-நிலங்களில் வாக்களிப்பதற்குப் புகைப்படம் ஒட்டியஅடையாள அட்டை கட்டாயமாகப் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் புகைப்படம்எடுப்பது குறித்தும், அடையாள அட்டை பெறுவது குறித்தும் -நான் ஏற்கனவே பல -முறை கட்சியினருக்கு வேண்டுகோள்விடுத்துள்ளேன்.

இப்போது விடுபட்ட வாக்காளர்களுக்குப் புகைப்பட அடையாள அட்டை வாக்காளர்களுக்குப் புகைப்பட அடையாள அட்டைவழங்கும் பணி தொடங்கப்பட இருக்கிறது. அதிமுகவினர் அனைவரும் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையைப்பெறுவது மட்டுமின்றி, தமது குடும்பத்தில் உள்ள 18 வயது -நிரம்பிய அனைவருக்கும் கட்டாயம் புகைப்படம் ஒட்டிய அடையாளஅட்டையைப் பெறுவதற்கு உ-ரிய -நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமக்கு அடுத்த வீடுகளில் உள்ளவர்கள் அடையாள அட்டை பெறுவதில் விடுபட்டு இருந்தால், அவர்களையும்சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று, புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுப்-ப-தில் தீவிரம்காட்ட வேண்டும்.

தற்போது ரேஷன் கார்டுகள் எத்தகைய அத்யாவசியப் பணிகளுக்குப் பயன்படுகிறதோ, அத்தகைய பணிகளுக்கு எதிர் காலத்தில்போட்டோ ஒட்டிய அடையாள அட்டை பல் நோக்கு அத்தாட்சியாகப் பயன்படுத்தப்பட இருப்பதை மக்கள் அனைவருக்கும்அதி-முகவினர் எடுத்துக் கூற வேண்டும்.

எத்தனை பேரை அழைத்துச் சென்று வாக்காளர் அடையாள அட்டை பெற்றுத் தந்துள்ளீர்கள் என்ற விவரத்தை எனக்குத்தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X