தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

குடிக்க பணம் கேட்டு குழந்தைகளைக் கொன்றவருக்கு இரட்டை ஆயுள்

கோவை:

மது குடிக்க பணம் தர மறுத்த மனைவி மீது கொண்ட ஆத்திரத்தில், தான் பெற்றஇரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (37).இவரது மனைவி சுசீலா (31). இவர்களுக்கு 5 வயதில் மதன் என்ற மகனும், 8 வயதில்அனிதா என்ற மகளும் இருந்தனர்.

சுசீலா, மில்வேலைக்குச் சென்று பணம் சம்பாதித்து குடும்பம் நடத்தி வந்தார். ஆனால்மாணிக்கம், குடிபோதையில் மிதந்து வாழ்க்கையை மறந்தார். அடிக்கடி மனைவியின்சம்பாத்தியத்தில் மது அருந்து விட்டு தகராறு செய்ய ஆரம்பித்தார்.

இந்நிலையில் 98ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி காலையில், மது அருந்த மனைவியிடம்பணம் கேட்டுள்ளார். ஆனால் சுசீலா பணம் கொடுக்காமல் வேலைக்குச் சென்றுவிட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த மாணிக்கம், காலையில் தயராக வைத்திருந்த காலைஉணவில் விஷத்தைக் கலந்து குழந்தைகள் இருவருக்கும் கொடுத்தார். இதில்குழந்தைகள் இரண்டு பேரும் மயக்கமடைந்தனர்.

குழந்தைகள் இறந்து போகாது என்ற சந்தேகமடைந்த மாணிக்கம், நைலான் கயிற்றைஎடுத்து இரண்டு குழந்தைகளின் கழுத்தையும் இறுக்கி கொன்று விட்டுதலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துமாணிக்கத்தை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது.நீதிபதி சொக்கலிங்கம், பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்தமணிக்கத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை (28 ஆண்டுகள்) விதித்து தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+