தமிழகத்தில் இன்று
மலேசியாவில் திருட்டு தமிழ் வி.சி.டிகளுக்கு தடை வரும்
சென்னை:
தமிழ் படங்களின் திருட்டு விசிடிகள், வீடியோக்கள் மலேசியாவில் புழங்குவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய அமைச்சர் டத்தோசாமிவேலு கூறியுள்ளார்.
தமிழில் வரும் திரைப்படங்கள் திரையரங்களுக்கு வரும் முன்னே திருட்டு வீடியோவில் வெளிவந்துவிடுகின்றன. இது போல் வீடியோவில் புதிய திரைப்படங்கள்வருவதை தடுப்பதற்கு மலேசியாவில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும்என அந்த நாட்டு அமைச்சர் டத்தோ சாமிவேலு தெரிவித்துள்ளார்.
மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு சென்னை வந்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க புதிய செயலாளர் நடிகர் சரத்குமார், சென்னைமாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் மலேசிய அமைச்சரை சந்தித்து திருட்டு வீடியோவை தடுப்பது குறித்து பேசினர்.
தமிழகத்தில் எடுக்கப்படும் புதிய தமிழ் திரைப்படங்கள் மலேசியாவில் திருட்டு வீடியோ எடுத்து விநியோகம் செய்யப் படுவதாகவும் அதை தடை செய்யமலேசிய அரசு முயற்சி மேற்கொள்ளும்படியும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்
மலேசியாவில் இத்தகைய சட்டவிரோதமான செயல்களும் நடந்து வருகின்றனவா என்று மிகவும் ஆச்சரியப்பட்டார் டத்தோ சாமிவேல். மலேசியாவில்உரிமை பெறப்படாத படங்களை வி.சி.டி எடுப்பது தடை செய்யப்படும். இது குறித்த சட்டம் விரைவில் ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.
சட்டம் இயற்றப்பட்டவுடன் அது தமிழ் திரைப்பட துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும்.அதில் உள்ள சாதக பாதகங்கள் பற்றி மலேசிய அரசுக்குதெரிவித்து ஆலோசனைகள் கூறுங்கள் என்று சரத் குமாரிடமும், கராத்தே தியாகராஜனிடமும் அவர் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications