மேற்கிந்தியத் தீவுகளுடன் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி
லண்டன்:
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வதுகிரிக்கெட் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில்தனது இரண்டாவது இன்னிங்ஸை சனிக்கிழமை காலை இங்கிலாந்து துவங்கியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சில்அவ்வப்போது இங்கிலாந்து வீரர்கள் அவுட்டானாலும் இறுதியில் 8 விக்கெட்இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.
2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்து,மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வால்ஷ் மற்றும் ஆம்புரோஸின் சிறப்பானபந்துவீச்சில் நிலைகுலைந்தது. குறிப்பாக வால்ஷின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
இதனால், 160 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்து தவித்தது. அந்தஅணியின் டொமினிக் கார்க் நின்று ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். கார்க்அவுட்டாகாமல் 33 ரன்கள் எடுத்தார். துவக்கத்தில் மைக் ஆர்தர்டனும், வாகனும்2-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வால்ஷ் சிறப்பாகப் பந்துவீசி 74 ரன்களுக்கு 6விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸிலும் அவர் 4விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர், ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைவீழ்த்தியது இது 21-வது முறையாகும். அதேபோல் ஒரு டெஸ்டில் 10விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியது இது 3-வது முறையாகும்.
இங்கிலாந்துக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையேயான இந்த டெஸ்ட்போட்டி லார்ட்ஸில் நடைபெற்ற 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதில் இங்கிலாந்துவெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியை அடுத்து 5 டெஸ்டுகள் கொண்ட இத் தொடரில் இரு அணிகளும் 1-1என்ற சமநிலையில் உள்ளன. பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ்மற்றும் 93 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில்ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்குகிறது.
இடையில் ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து இடையிலான ஒருநாள்கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications