தமிழகத்தில் இன்று
செசன்யாவில் கார் குண்டு வெடிப்பில் 50 போலீஸார் சாவு
மாஸ்கோ:
செசன்யாவில் உள்ள ஆர்குன் நகரில் திங்கள்கிழமை நடந்த கார் குண்டு வெடிப்பில் குறைந்தது 50 போலீஸார் கொல்லப்பட்டிருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது. 80-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர்.
செசன்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஆர்குன் நகரில் உள்நாட்டு அமைச்சகத்தின சிறப்புப் படைப் போலீஸார் ஒரு கட்டடத்தில் தங்கியிருந்து பாதுகாப்புப்பணியினை மேற்கொண்டு வந்தனர்.
இந் நிலையில், போலீஸார் தங்கியிருந்த கட்டடத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், திங்கள்கிழமை திடீரென்று வெடித்தது. இதில் 50 பேர்கொல்லப்பட்டனர். 81 போலீஸார் காயமடைந்தனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கார் நிறைய வெடிபொருட்களை நிரப்பி அதை கட்டடத்துக்கு அருகே நிறுத்தி வைத்தப்பிறகு அதைத் தீவிரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர் என்றும்அவர்கள் தெரிவித்தனர். குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு 3 போலீஸாரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோல், செசன்யாவின் இரு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இருகுண்டுவெடிப்புகளைை தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடெர்மெஸ் மற்றும் உருஸ் மார்ட்டின் என்ற இரு நகரங்களில் நடந்த இக் குண்டுவெடிப்புகளின் பாதிப்பு பற்றி உடனடி தகவல்கள் ஏதும் இல்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications