தமிழகத்தில் இன்று
எம்.ஏ. படிக்க விரும்பும் நளினி
வேலூர்:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுவித்துவரும் நளினி, எம்.ஏ படிக்க அனுமதி கோரி சிறை அதிகாரிகளிடம்விண்ணப்பித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்பட நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. இதில் நளினியின் குழந்தையின் எதிர்காலம் கருதி அவருக்குவிதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
நளினியின் கணவர் முருகனும் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவர். அவரதுதண்டனையும் தளர்த்தப்பட வேண்டும் என்று நளினி கடவுள்களிடம் வேண்டிவருகிறார். இந்த நிலையில் அவருக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகும் முன் நளினி, எம்.ஏ. படித்து வந்தார். சிறைவாசத்தால் படிப்பு தடைபட்டது. தற்போது ஆயுள் தண்டனை கிடைத்துள்ளதால்சிறையில் அதிக நேரம் அவருக்குக் கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்தி தனது எம்.ஏ.படிப்பை முடிக்க நளினி முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக சிறை அதிகாரிகளிடம்அவர் விண்ணப்பித்துள்ளார். உயர் அதிகாரிகள் அதைப் பரிசீலித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications