தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மீண்டும் ஒரு காவல் நிலை-ய கற்பழிப்பு

சென்னை:

தமிழ்நாடு காவல் துறைக்கு மேலும் ஒரு கரும்புள்ளி விழுந்துள்ளது. போலீஸ் நிலையத்தில் போலீஸாரால் கற்பழிக்கப்பட்ட பெண்கள் பட்டியலில்இப்போது சேர்ந்திருப்பவர் நாகு (35).

ஒசூர் அருகே உள்ள அஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். 15 ஆண்டுகளுக்கு முன்பே கணவர் வெங்கடேசன் 15 பிரிந்து சென்றுவிட்டார். ஒரே மகனுடன்நாகு வசித்து வந்தார். நாகுவின் மகன் கிளீனராகப் பணியாற்றி வருகிறார்.

அஞ்சட்டி அருகேயுள்ள பாகலூரில் வசிக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு இரவு பஸ்ஸில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் நாகு. பஸ்ஸைவிட்டு இறங்கியநாகுவை, போலீஸ் ஏட்டு சேகர், போலீஸ்காரர் ரவிச்சந்திரன் இருவரும் மறித்தனர்.

அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு 10 மணிக்குள் போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப் போடவில்லை சிறையில்அடைத்துவிடுவோம் என்று மிரட்டினார்.

நாளை காலை வருகிறேன் என்ற நாகுவை மிரட்டி வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நாகுவைப் போலீஸார்கற்பழித்துள்ளனர்.

நள்ளிரவுக்குப் பிறகு வீடு திரும்பிய நாகு, இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் கற்பழிக்கப்பட்டதை ஊரில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்துகம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த பாண்டு, மகாதேவன் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்குச் சென்று விசாரித்தனர்.

நடந்த சம்பவத்தை மறந்துவிடுமாறு கூறி நாகுவின் கைச் செலவுக்கு ரூ.1000 கொடுத்துள்ளனர். மேலும், ரூ.900 கொடுத்து பாகலூரில் சென்றுவசிக்கும்படியும் போலீஸார் கூறியுள்ளனர். அதன் பிறகு அச்சம்பவம் அத்துடன் மறைக்கப்பட்டது.

இதற்கிடையே, அஞ்செட்டி போலீஸ் நிலைய ஜீப் டிரைவர் குணசேரன் கோரிப்பாளையத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது அஞ்சட்டி பகுதியைச் சேர்ந்தபாண்டுவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அஞ்செட்டி போலீஸ் நிலையத்தைத் தாக்கினர். குணசேகரனையும் தாக்கினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்துபோலீஸ் நிலையத்தில் நாகு கற்பழிக்கப்பட்ட விஷயம் வெளியானது.

இதைத்தொடர்ந்து நாகு தற்போது ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கற்பழிப்பு தொடர்பாக வேலூர் அரசு டிஐஜி சி.வி.ராவ் உத்தரவின் பேரில் ஏட்டு சேகர், போலீஸ்காரர் ரவிச்சந்திரன் ஆகியோரும் பணியில்கவனக்குறைவு காரணமாக இன்ஸ்பெக்டர் வெங்கடாசலமும், பொது இடத்தில் தகராறு செய்ததாக ஜீப் டிரைவர் குணசேகரனும் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+