தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சிரித்தால் இனிக்கும், சீதாராமன், செளபர்ணிகா (பேய் தொடர்) சீரியல் ஹிட்டாக, விஜய சத்யா தேவி..என்கிற பெயர் செளபர்ணிகா என்று மாறிவிட்டது.விசாரித்தோம். கெஸட்டிலும் மாற்றிவிட்டாராம்.

அழுத்தமான ஒரு பார்வை, கண்கள் இமைக்காமல் கூர்ந்து கவனித்தபடி பேசுகிறார். வாழ்க்கை பற்றிய தெளிவும், நிறைய நல்ல சிந்தனைகளோடும்பேசுகிறார். அவருக்கு பிடித்த டாப் டென்களை இங்கே வரிசைப்படுத்துகிறார்.

1.இந்தியா:

இந்தியா... மிகவும் உயர்வான விஷயம். நம் நாட்டில் இல்லாத விஷயங்களே கிடையாது. உங்களுக்குத் தெரியுமா. உலக்தில் இருக்கின்றநாடுகளிலேயே, இந்தியாவுக்கு தனி மரியாதை உண்டு. நமக்கு தேவை என்ன பணம்,புகழ்,செல்வாக்கு இப்படி எல்லாவற்றையும் சம்பாதித்த பிறகுஅடுத்து அடுத்து என்று யோசித்த பின்பு ஒரு முடிவு தெரியாமல் தவிக்கின்ற நேரத்தில் எண்ணங்கள் விபரீதமாகி விபரீதமான முடிவுகளைஎடுத்துவிடுவார்கள்.

தற்கொலை அல்லது வேறு ஒரு க்ரைம் அந்த இடத்தில் நிகழ்கிறது. இந்தியாவில் மட்டும் தான் தேடலின் தவிப்பை கட்டுப்படுத்த நிறையரிலாக்ஸ்ஷேஷன்ஸ் இருக்கிறது. இதனால் தான் இந்தியாவை spritual country என்கிறோம். ஐ லவ் இந்தியா.

2.குடும்பம்:

குடும்பம் என்பதும் அற்புதமான விஷயம். என்னைப்பொறுத்தவரை என் அப்பாஅம்மாதான் என் முதல் நண்பர்கள்.தோளுக்கு மிஞ்சினால் தோழி என்று புரிந்துகொண்டவர்கள். (நல்லவிஷயம் செளபர்ணிகா.)

3.மியூசிக்:

எல்லாத்துக்கும் இசை இருக்கு. சந்தோஷமா இருக்கணுமா, துக்கமா இருக்கா, மியூசிக்கேட்டால் போதும். மனது சரியாகிவிடும். இசை நல்ல விஷயம்.

Soubarnika4. பூக்கள்:

எல்லா பூக்களுமே எனக்கு பிடிக்கும். மெல்லிதான இதழ்கள்.. மென்மையானகாம்புகள்.. இதை வைத்துக்கொண்டு அந்த மலர்கள் எவ்வளவுபிரகாசமாக.. வாசனையோடு இருக்கிறது. வாழும் காலம் கொஞ்சம் தான்என்றாலும்.. கவலையில்லாமல் காலையில் சிரிக்கிறது பாருங்கள் அது அழகு.

5. வேகம்:

கார்ல ரொம்ப ரொம்ப வே.........க...........மா ஓட்டறதுன்னா அவ்வளவு பிடிக்கும்.அதேமாதிரிதான் நான் எல்லாத்துலேயும் ரொம்ப வேகம். எந்த ஒரு காரியத்தையும்இழுத்தடிக்காம உடனே செய்யணும் என்று நினைப்பேன். செய்து கொண்டும்இருக்கிறேன்.

6.போட்டோகிராபி:

அந்த நிமிடப்பதிவுகளை உணர்ச்சிகளை மிகத்தெளிவாக காமிரா உள்வாங்கிபிரதிபலிப்பது நம்மை குதூகலிக்க வைக்கிற விஷயம். ரொம்ப இன்டிரஸ்டிங்கானவிஷயம் காமிரா , புகைப்படம் என்பது.

7.டிரஸ்:

டிரஸ் டிசைனிங் ரொம்ப பிடிக்கும். டிரஸ் நல்லாருக்கு என்கிறதை விடஎனக்கு அந்தடிரஸ் மேட்சா இருக்காங்கிறது தான் கேள்வி.

8.இடங்கள்.:

வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். மன்னர்கள் வாழ்ந்தகாலங்களைச் சொல்வது இன்றுள்ள இடங்கள் மட்டுமே. அதேமாதிரி பழங்காலமனிதர்களின் நினைவுகளை இன்னும் பதிவு செய்து வைத்திருப்பது சில இடங்கள்மட்டுமே.

இடங்களை , அரண்மனைகளை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தபின்பும் பல நாட்களுக்குஅந்த நினைப்பே மாறாமல் யோசித்துக்கொண்டிருப்பேன்.

Soubarnika9.அருவி:

பளீரென்று , துள்ளிக்குதித்து..ஒரு ஒசையுடன் அருவி தாவிவருகின்ற விஷயம்.சட்டென்று அருவியில் தலை நனைக்க...உடல் முழுவதும் ஒரு வித குளூமைபரவுகின்ற உணர்வு..சுகம். அருவியின் நடுவே தலையாட்டி, தலையாட்டிகுளித்துக்கொண்டிருக்குமே சின்ன சின்ன செடிகள் அது ஆனந்தமிக்கது என்பேன்.

10.பிலாஸபி:

ராமகிருஷ்ணருடைய தத்துவங்கள் பிடிக்கும். குறிப்பாக காமினி, காஞ்சனா இந்தஇரண்டு வார்த்தை தத்துவத்தில் அவ்வளவு அர்த்தங்கள் பொதிந்து இருக்கிறது. காமினிஎன்றால் பெண், காஞ்சனா என்றால் தங்கம். இந்த இரண்டிலுமே மனிதர்கள்எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பெண்ணுக்கு தங்கம் ,ஆண் இந்த இரண்டிலும் ஒரு வரையறை வேண்டும். ஆணுக்கும்பெண், பொருள் இவை இரண்டிலும் ஒரு அளவோடு ஆசைப்படவேண்டும். காமினி,காஞ்சனா..இந்த இரண்டுமே..மிகவும் எச்சரிக்கையான விஷயங்கள்.

செளர்பர்ணிகா நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்துமே காஞ்சனா. புரியலை ... ?தங்கம் மாதிரின்னு சொல்லவந்தோம்... ஹி..ஹி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+