தமிழகத்தில் இன்று
300 தமிழர்க-ளி-டம் இலங்கை ராணுவம் விசாரணை
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 300 தமிழர்களை இலங்கை ராணுவம் பிடித்து விசாரித்துள்ளது.
இத் தகவலை இலங்கை வானொலி தெரிவித்தது. தலைநகர் கொழும்பிலிருந்து 140 கிலோமீட்டர் தூரமுள்ள புத்தளம் பகுதியில் இலங்கை ராணுவத்தினரும்,போலீஸாரும் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது புலிகள் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் ராணுவ முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு 160 பேர் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் இன்னும் ராணுவத்தின் பிடியில் உள்ளனர்.
இதற்கிடையே, இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இத் தாக்குதலில் புலிகளின் இரு வாகனங்கள் சேதமடைந்ததாகவும், புலிகளில் சிலர் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications