"ஈரோ-2000 ஒரு பார்வை: 31 ஆட்டங்கள் - 85 கோல்கள்
ராட்டர்டாம்:
பெல்ஜியம் மற்றும் ஹாலந்து நாடுகளில் சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோ -2000 கால்பந்துக் கோப்பையை வென்று புதிய ஐரோப்பிய சாம்பியனாகியுள்ளதுபிரான்ஸ்.
ஏற்கெனவே உலகக் கோப்பையும் வென்று புதிய சாதனையை அந்த நாடு ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 10-ம் தேதி தொடங்கி ஜூலை 2-ம் தேதி வரை இந்தக் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. ஜூலை 2-ம் தேதி ராட்டர்டாம் நகரில் நடந்தஇறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியைத் தோற்கடித்து பிரான்ஸ் கோப்பையை வென்றது.
ஈரோ-2000 கால்பந்துக் கோப்பையின் மேலும் சில புள்ளிவிவரங்கள்:
1. ஜூன் 10 முதல் ஜூலை 2-ம் தேதி வரை தகுதிச் சுற்று ஆட்டங்கள், கால்இறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டம் என 23 நாட்களில்மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் மொத்தம் 85 கோல்கள் போடப்பட்டன. இதுவரை நடந்த ஐரோப்பிய கால்பந்துச்சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்த முறைதான் அதிக கோல்கள் போடப்பட்டுள்ளன.
2. அதிக கோல்கள் போட்டது ஹாலந்து அணி. 5 ஆட்டங்களில் அந்த அணி 14 கோல்கள் போட்டது. அடுத்து 6 ஆட்டங்களில் 13 கோல்கள் போட்டுபிரான்ஸ் இரண்டாம் இடம் பிடித்தது.
3. ஒரு ஆட்டத்தில் அதிக கோல்கள் போட்டதும் ஹாலந்து அணிதான். கால் இறுதியில் யுகோஸ்லாவியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி 6கோல்கள் போட்டது. அந்த ஆட்டத்தில் மொத்தம் 7 கோல்கள் போடப்பட்டன. ஒரு ஆட்டத்தில் அதிக கோல்கள் போடப்பட்டதும் இந்தஆட்டத்தில்தான்.
4. ஈரோ-2000 போட்டியில் ஒரே ஹாட்-ரிக் கோல்கள் போட்டது போர்சுகல் அணியின் செர்ஜியோ கான்சிகா. 1988-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்ஹாட்-ரிக் இது என்பது குறிப்பிடத்தக்கது. யுகோஸ்லாவியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாலந்தின் குளீவர்ட் 4 கோல்கள் போட்டார். அது ஹாட்-ரிக்கோல்கள் இல்லை.
5. ஈரோ-2000 போட்டியில் மொத்தம் 10 சிகப்பு அட்டைகள் காண்பிக்கப்பட்டன.
6. 3 ஆட்டங்கள் கூடுதல் நேரத்துக்குச் சென்றன. இதில் இரு ஆட்டங்களில் கோல்டன் கோல் மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. இரண்டிலும் பிரான்ஸ்வென்றது குறிப்பிடத்தக்கது. மற்றொரு ஆட்டத்தில் கூடுதல் நேரமும் முடிந்து பெனால்டி கிக் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது.இத்தாலிக்கும், ஹாலந்துக்கும் இடையே நடந்த இந்த அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வெற்றி பெற்றது.
7. ஈரோ-2000 போட்டியில் அதிக கோல்கள் போட்டு முதல் இடத்தை இருவர் பிடித்துள்ளனர். ஹாலந்தின் குளீவர்டும், யுகோஸ்லாவியாவின் சாவோமிலோசெவிக் இருவரும் தலா 5 கோல்கள் போட்டுள்ளனர்.
8. ஐரோப்பிய சாம்பியன் கோப்பையை இரண்டாவது முறையாக பிரான்ஸ் வென்றுள்ளது. ஜெர்மனி மூன்று முறை ஐரோப்பிய சாம்பியன் கோப்பையைவென்று சாதனை படைத்துள்ளது.
9. முன்னாள் சாம்பியனான டென்மார்க் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு கோல்கூட போடவில்லை என்பதும், கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம்பெற்ற ஜெர்மனி, கால் இறுதிக்குக் கூட தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
10. அடுத்த ஐரோப்பிய கால்பந்துப் போட்டிகள் 2004-ம் ஆண்டு போர்சுகல்லில் நடைபெற உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications