தமிழகத்தில் இன்று
தாலி திருடியவனை துரத்திப் பிடித்த "சூப்பர் உமன்
சென்னை:
தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை விடாமல் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார் ஒருபெண்.
இந்த வீரப் பெண் பற்றிய விவரம் இதோ:
சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.நகர் முதலாவது மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் வசிப்பவர் ஜனா. வயது 22.திருமணமானவர். கணவர் வேலைக்கு சென்று விட்ட சமயத்தில் வீட்டுக்குள் சமையல் வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தார்.
பூட்டப்பட்டிருந்த கதவு திடீரென்று தட்டப்படும் சத்தம் கேட்டது. பகல் நேரம் என்பதால் பயப்படாமல் கதவைதிறந்தார். வாசலில் நின்றிருந்த திருடன், "சார் இருக்கிறாரா? என்று விசாரித்தான். ஜனா இல்லை என்றுபதிலளித்ததும், குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டான்.
வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார் ஜனா. தண்ணீர் டம்ளரை வாங்கும் சாக்கில்,அப்பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடினான் திருடன்.
ஆனால், மற்ற பெண்கள் போல பயந்து அலறி அங்கேயே நின்று கொண்டிருக்கவில்லை ஜனா. சங்கிலியுடன் ஓடியதிருடனை பின் தொடர்ந்து ஓடினார். "திருடன்... திருடன்... பிடிங்கள் என்று குரல் கொடுத்துக் கொண்டே அவனைவிரட்டினார்.
சாலையில் இக்காட்சியை கண்டதும் பொதுமக்கள் திரண்டு விட்டனர். அவர்களும் அப்பெண்ணுக்கு துணை வர,தைரியமாக திருடனை விரட்டினார் ஜனா. கடைசியில் தப்பிக்க முடியாமல் ஜனா கையில் சிக்கினான் திருடன்.அவனை பிடித்து இழுத்துச் சென்று சைதாப்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் திருடன் பெயர் சவுந்தர் (வயது 24) என்றும், காஞ்சிபுரம் அருகே கேளம்பாக்கத்தைசேர்ந்தவன் என்றும், பல பெண்களிடம் தாலியை பறித்தவன் என்பதும் தெரியவந்தது.
திருடனை துணிச்சலுடன் விரட்டிச் சென்று பிடித்த ஜனாவை போலீசார் பெரிதும் பாராட்டினர்.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications