பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
சுதந்திர தினத்தை கப்பலில் கொண்டாடிய கிளின்டன்
நியுயார்க்:
இந்த நூற்றாண்டின் முதல் அமெரிக்க சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அமெரிக்க கடற்படைக் கப்பலில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்ச்சியில் அதிபர் பில் கிளின்டன் கலந்து கொண்டார்.
அதிபர் பில் கிளின்டன், அதிபராக இருந்து கலந்து கொண்ட கடைசி சுதந்திர தின நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இன்னும் சில மாதங்களில்அவரது பதவிக் காலம் முடிவு பெறுகிறது.
நியுயார்க் துறைமுகத்தில் இருந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி பெயரிடப்பட்ட கப்பலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.அக் கப்பல் முன் செல்ல உலகம் முழுவதும் இருந்து வந்த பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 பெரிய கப்பல்கள் அதைப் பின் தொடர்ந்து சென்றன. அதிபர்பில் கிளின்டன் சென்ற கப்பலுக்குப் பாதுகாப்பாக அக் கப்பலைச் சுற்றி அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த போர் படகுகள் அணிவகுத்து வந்தன.
இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிபர் பில் கிளின்டன், தன் வாழ்நாளில் கலந்து கொண்ட மிகப்பெரிய கப்பல் நிகழ்ச்சிஇது என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவியின் நிழலில் இருந்து பேசுகிறேன். நாம் நமது பொற்கதவை எப்போதும் திறந்துவைத்திருக்கவேண்டும். வெளிநாட்டு மக்களை நம் நாட்டுக்கு வரவேற்கும் அதே வேளையில், அவர்களை நமது இதயத்துக்குள் வரவேற்கவேண்டும்.
எல்லோரையும் சமமாக மதிக்கும் குணம், கடவுள் கண்களுக்குச் சமமானது. எல்லோரையும் அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நமக்குஇணையாக மதித்து நடக்கவேண்டும். இதுவே ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் நமது தீர்மானமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றார்கிளின்டன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications