பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
ஒரே மேடையில் திரளும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள்
சென்னை:
தோழமைக் கட்சித் தலைவர்களுடனான கருத்து வேறுபாடுகளை மறந்து அவர்களுடன்கை கோர்த்து தேர்தலை சந்திக்கத் தயாராகிறார் ஜெயலலிதா.
அணிக்குள் நிலவும் அதிருப்திகளை மறந்து ஜெயலலிதா, மூப்பனார், இளங்கோவன்உள்ளிட்ட தலைவர்கள் ஒன்று சேர்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களம்அமைத்துக் கொடுத்துள்ளது.
அதன்படி சென்னையில் வியாழக் கிழமை ஜெயலலிதா, மூப்பனார், இளங்கோவன்மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒரே மேடையில் பேசுகின்றனர்.
தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையில் ஒரு அணியும், அதை எதிர்த்து அதிமுகதலைமையில் இன்னொரு அணியும் வரவிருக்கும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிவருகின்றன.
இரண்டு அணிகளிலுமே ஆயிரம் கருத்து வேறுபாடுகள், அதிருப்திக் கோஷங்கள்இருக்கத் தான் செய்கின்றன. ஆளும் திமுக தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கும், ராஜீவ் காங்கிரசுக்கும் கடும் மோதல் நிலவுகிறது.
இந்த மோதல் காரணமாக திமுக அணியில் இருந்து பாமக வெளியேறக் கூடும் என்றுபேசும் அளவுக்கு பிரச்னை பெரிதாகியிருக்கிறது. அதை உணர்ந்தோ என்னவோபாமகவுக்கு மாற்றாக இன்னொரு கட்சிக்கு வலை விரிக்க முதல்வர் கருணாநிதி முன்வந்துள்ளார்.
கடந்த மாதத்தில் சென்னையில் தமது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்றஉறுப்பினர்களை அழைத்து வைத்துப் பேசிய கருணாநிதி, தேர்தல் நேரத்தில் கூட்டணிமாறும் என்று நம்பிக்கை ஊட்டி அவர்களை எல்லாம் அனுப்பி வைத்தார்.
அந்த ஆலோசனைக்கு முன்னதாக நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தமாகாஎம்.எல்.ஏ. ரங்கநாதன் முன்னிலையில் பேசிய கருணாநிதி, திமுக அணிக்கு தமாகாதிரும்ப வேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பு குறித்துஇதுவரை மவுனம் சாதித்து வருகிறது தமாகா. திமுகவா அல்லது அதிமுகவா என்பதில்எந்த இறுதி முடிவையும் அறிவிக்காமல் கூட்டணி பற்றிய வாய்ப்பை திறந்தேவைத்திருக்க தமாகா விரும்புகிறது.
தல்வரின் அழைப்பு, அதை நிராகரிக்க மூப்பனார் மறுப்பு என்ற நிலையில் திமுக -தமாகாவின் அரசியல் செயல்பாடுகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்,கையில் இருக்கும் கட்சிகளை இழந்து மீண்டும் சூடு போட்டுக் கொள்ள ஜெயலலிதாதயாராக இல்லை.
அதனால் தான் அவசர அவசரமாக தி.க. தலைவர் வீரமணியின் ஏற்பாட்டின் பேரில்தஞ்சாவூரில் மூப்பனாருடன் மீண்டும் கை கோர்த்தார். தமாகா விதிக்கும் "கூட்டணிஆட்சி என்ற நிபந்தனையை ஏற்காமலும், அதே நேரத்தில் மறுக்காமலும் இருகட்சிகளுடையேயான உறவை வலுப்படுத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
அவரது திட்டத்திற்கு உதவும் வகையில் தமிழக மார்க்சிஸ்ட் கட்சி அதிமுக அணித்தலைவர்களை எல்லாம் ஒரே மேடையில் ஏற்ற முன் வந்துள்ளது.
தேசிய அளவில் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி, தமிழகத்தில்பாஜக- திமுக கூட்டணியை முறியடிக்க அதிமுக தலைமையிலான அணி சிதறிவிடக்கூடாது என்று துடிக்கிறது. அதன் காரணமாக அக்கட்சி விரும்பியே தலைவர்களின்ஒற்றுமைக்கு உதவ முன் வந்துள்ளது என்றே அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இப்பின்னணியில் மார்க்சிஸ்ட் கட்சி, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்துசென்னை பனகல் பூங்காவில் மாபெரும் கணடனப் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்துள்ளது.
இக்கூட்டம் வியாழக் கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு வரவேண்டும் என்று தோழமைக் கட்சிகளை எல்லாம் அழைத்துள்ளது.
அதன்படி நீண்ட நாட்களுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமாகாதலைவர் மூப்பனார், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட்செயலாளர் நல்லகண்ணு, ஜனதா தளம் (எஸ்) தலைவர் ஜி.ஏ.வடிவேலு, ராஷ்டிரியஜனதா தளத் தலைவர் ஜெகவீரபாண்டியன், பார்வர்டு பிளாக் தலைவர் சந்தானம்,விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தேசிய லீக் தலைவர் லத்தீப் மற்றும்பல தலைவர்கள் ஒரே மேடையில் பேசுகின்றனர்.
இந்தியாவில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும், மத போதகர்கள் மீதும் நடந்து வரும்தாக்குதலை கண்டித்தும், இச்செயலை தடுத்து நிறுத்தாத பாஜக, திமுக அரசுகளைகண்டித்தும் இந்த கூட்டத்தில் இவ்வளவு தலைவர்களும் பேச உள்ளனர்.
இதன்மூலம் தமிழகத்தில் திமுக - பாஜக கூட்டணிக்கு எதிராக களமிறங்கப் போவதுஇது தான் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் வியாழக்கிழமை கூட்டம் அமையும்என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications