பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது

Subscribe to Oneindia Tamil

பாக். பீரங்கித் தாக்குதலில் 12 வயது சிறுமி காயம்

ஜம்மு:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் எல்லைப் பகுதியைத் தாண்டி பாகிஸ்தான் படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 12 வயது சிறுமிகாயமடைந்தாள்.

அரசுத் தரப்புச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில், பாகிஸ்தான் படையினர் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பீரங்கிகளால் தாக்குதல்நடத்தி வருகின்றனர். ஜம்மு பிரிவு முழுவதிலும், எல்லைப் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து வருகிறது.

இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளைக் குறி வைத்து இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் படையினர் மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதலில் 12 வயது சிறுமி அஞ்சலா தேவி காயமடைந்தாள். அக்னூர் மருத்துவமனையில் அவள் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

இந்தியப் படையினரும் பதிலுக்குத் தாக்குதல் நடத்தினர். இருப்பினும் பாகிஸ்தான் தரப்பில் சேதம் குறித்துத் தெரியவில்லை.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+