பிரதமர் பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.பி. மாரடைப்பில் சாவு
ம.தி.மு.க.வை தடை செய்ய கோர ஜெ யார்? கேட்கிறார் வைகோ
சென்னை:
செய்த குற்றங்களுக்காக நீதிமன்றத் தண்டனை பெற்று தேர்தலில் நிற்பதற்கு, தடையைஎதிர்நோக்கியுள்ள ஜெயலலிதா ஒரு கிரிமினல் குற்றவாளி. அவருக்கு ம.தி.மு.கவைதடை செய்ய சொல்வதற்கு தகுதியே இல்லை என்று வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
புலிகள் ஆதரவு மாநாடு நடத்திய ம.தி.மு.கவை தடை செய்ய வேண்டும் என்றுஅ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்குபதிலடி கொடுத்து ம.தி.மு,.க பொதுச்செயலாளர் வைகோ புதன் கிழமை வெளியிட்டஅறிக்கை இது:
கர்ண கொடூரமான வார்த்தைகளால் அர்ச்சித்து ஜெயலலிதா ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளார். ம.தி.மு.க மாநாட்டின் மாபெரும் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத ஆத்திரத்தில் அம்மையார் பொரிந்து தள்ளியிருக்கிறார்.
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ வேண்டும் என்பதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள இயக்கம் ம.தி.மு.க. இந்தியாவின்ஒற்றுமையையும், ஜனநாயகத்தையும்பாதுகாப்பதற்காக எத்தகைய தியாகத்துக்கும் தயாராக இருக்கும் இயக்கம்.
ம.தி.மு.க தோன்றியது முதல் ஆறரை ஆண்டுகளாக துளியளவு கூட வன்றையில்ஈடுபட்டதில்லை. அத்தகைய ஒழுங்கும், கட்டுப்பாடும், அறவழியில் செயல்படும்பண்பாடும் கொண்ட லட்சோப லட்சம் இளைஞர்களை கொண்டது ம.தி.மு.க.
கோடி கோடியாக கொள்ளை அடித்து ஊரையே அடித்து உலையில் போட்டு அரசியல்நெறிகள், பண்பாடுகளை குழி தோண்டி புதைத்து தமிழ்நாட்டையே பாழ்படுத்தி நாசம்செய்த ஜெயலலிதாவுக்கு நாட்டை பற்றி பேச அருகதை கிடையாது. ஆட்சியில்இருந்தபோது ரவுடிகளை ஏவி விட்டு வன்றை வெறியாட்டம் நடத்தியவர் ஜெயலலிதாதான் என்பதை நாடறியும்.
ஈரோடு மாநாட்டில் ம.தி.மு.க மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு தீர்மானங்களைநிறைவேற்றியது. இலங்கையில் துயறுரும் தமிழர்களை பாதுகாக்க குரல் கொடுக்கிறது.அதே நேரத்தில் இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்க பாடுபடுகிறது.
செய்த குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தேர்தலில் நிற்பதற்கேதடையை எதிர்நோக்கியுள்ள ஒரு கிரிமினல் குற்றவாளி, ம.தி.மு.கவை தடை செய்யசொல்கிறார். தேச பக்தியை பற்றி கீதோபதேசம் செய்கிறார். சாத்தான் வேதம் ஓதுகிறது.
வன்முறையை ஏவி விட்டு தர்மபுரியில் 3 மாணவிகளை உயிர் பலி வாங்கியஜெயலலிதாவா அமைதியை பற்றி பேசுவது?எத்தகைய பித்தலாட்ட மாய்மாலஅறிக்கைகளை விட்டாலும் அரசியல் வீழ்ச்சியில் இருந்து ஜெயலலிதா ஒருபோதும்மீள முடியாது என்று கூறியுள்ளார் வைகோ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications