பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிடாது வாஜ்பாய்
சென்னை:
இலங்கைப் பிரச்னையில் இந்தியா எந்த விதத்திலும் தலையிடாது என்று சென்னையில்பிரதமர் வாஜ்பாய் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இலங்கைப் பிரச்னை தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்குஇடையில் ஏற்பட்டுள்ள பிரச்னை ஒன்றும் பெரிதல்ல. அதை பேசித் தீர்த்துக்கொள்வோம் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் வாஜ்பாய் புதன் கிழமை காலைதிருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை நாட்டுக்குஅர்ப்பணிப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: இலங்கை பிரச்னையில் இந்தியா தலையிடாது என்ற முடிவில் ஏதாவதுமாற்றம் உண்டா? இலங்கை அரசுக்கு தெரியாமல் விடுதலைப் புலிகளுக்கு இந்தியாஉதவ வேண்டும் என்று புலிகள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறதே?
பதில்: இலங்கைப் பிரச்னையில் இந்தியா எந்த விதத்திலும் தலையிடாது. இந்நிலையில்எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தமிழக தலைவர்கள் சிலர்விடுதலைப் புலிகளுக்கு உதவ வேண்டும் என்று பேசி வருகிறார்களே...?
பதில்: அதுபற்றி எனக்குத் தெரியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தமிழகதலைவர்களுடன் இலங்கைப் பிரச்னை குறித்து ஏற்கனவே பேசியுள்ளோம்.இவ்விஷயத்தில் எந்த பிரச்னை வந்தாலும் நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம்.
கேள்வி: காஷ்மீரில் இருந்து சுயாட்சிக் கோரிக்கை எழும்பியுள்ளதே...?
பதில்: அது முடியாது. 1953ல் இருந்ததுபோல் காஷ்மீரில் அதிகாரங்கள் கேட்கின்றனர்.அது முடியாது என்று கூறி விட்டோம். அதற்காக மாநிலங்களுக்கு அதிகாரமே தரக்கூடாது என்பதல்ல எங்கள் நிலை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைத்திட்டமே, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்பது தான்.அதை நாங்கள் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.
கேள்வி: காஷ்மீரின் சுயாட்சி தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிராகரித்து விட்டது.அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? மீண்டும் அது நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்குஎடுத்துக் கொள்ளப்படுமா?
பதில்: அப்படி எந்த திட்டமும் இல்லை. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் யாராவதுகிளப்பினால் விவாதிப்பது பற்றி பரிசீலிக்கலாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் காஷ்மீர் தொடர்பாக எந்தக் குழப்பமும் இல்லை.எங்கள் கூட்டணியில்தான் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சிநீடிக்கிறது. கூட்டணியில் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து பரூக் அப்துல்லாதான்முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பிரதமரை, தமிழக முதல்வர் கருணாநிதி,மத்திய, மாநில அமைச்சர்கள் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். பிரதமருடன்மதிமுக தலைவர் வைகோவும் அதே விமானத்தில் மதுரை சென்றார்.
காலை 10.20 மணிக்கு அவர் விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்துஹெலிகாப்டர் மூலம் கயத்தாறு சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதுரை வழியாக டெல்லி திரும்பினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications