தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இன்சூரன்ஸ் சேவையில் நுழைகிறது பஞ்சாப் நேஷனல் வங்கி

சண்டீகர்:

இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கார்டு சேவையில் நுழைய பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அந்த வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எஸ்.எஸ். கோலி கூறியதாவது:

இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிக் கார்டு சேவையில் ஈடுபட பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டுக் கூட்டு நிறுவனத்துடனும்,கிரெடிட் கார்டு சேவையில் முன்னணியில் உள்ள நிறுவனத்துடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான நடைமுறைப் பணிகள் முடிக்கப்படும்.

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரெடிட் கார்டு சேவையைைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டால் வங்கியின்வாடிக்கையாளர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விரைவில் எலக்ட்ரானிக் பேங்கிங் சேவையிலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குஇந்த கிரெடிட் கார்டு அறிமுகம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.

ஏற்கெனவே, ஏடிஎம் வசதியை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பஞ்சாப் நேஷனல் வங்கி உருவாக்கியுள்ளது. மற்ற நகரங்களிலும் இந்த வசதிவிரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு சேவை அறிமுகப்படுத்தப்பட்டால், ஏடிஎம் கிளைகளிலேயே கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வெளிநாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து இன்சூரன்ஸ் சேவையிலும் ஈடுபட பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பணிகள் ஏற்கெனவேதொடங்கப்பட்டுவிட்டன. இன்சூரன்ஸ் சேவை குறித்து இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை வளர்ச்சி அமைப்பு தனது இறுதி முடிவை வெளியிட்ட பிறகு முழு வீச்சில் இப் பணியில்வங்கி ஈடுபடும்.

நாடு முழுவதும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 3853 கிளைகளும், 383 விரிவாக்கக் கிளைகளும் உள்ளன. இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள்அறிமுகப்படுத்தப்பட்டால், வங்கியின் சேவை மேலும் விரிவடையும்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பானநடைமுறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் கோலி.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+