இலங்கைக்கு இரண்டாவது வெற்றி
கல்லே:
சிங்கர் கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை தனது இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது.
கல்லேயில் வியாழக்கிழமை நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இலங்கையை பேட் செய்ய அனுப்பியது. 50 ஓவரில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.சங்காக்கரா 84 ரன்களும், ரஸல் அர்னால்டு 60 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.2 ஓவரில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில்இலங்கை வெற்றி பெற்றது. ஹால் 81 ரன்களும், கிர்ஸ்டன் 59 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை அணியில் உபல் சந்தனா 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகராக இலங்கையின் சங்காக்கரா தேர்வு செய்யப்பட்டார்.
புதன்கிழமை நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப் போட்டித் தொடரின் அடுத்த ஆட்டம் பாகிஸ்தானுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே கொழும்பில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
யு.என்.ஐ.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications