யோகம் பயிலுவோம்

Subscribe to Oneindia Tamil

அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேறும் - சந்திரிகா நம்பிக்கை

கொழும்பு:

புதிய அரசியல் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அனைத்துஅரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பையும் அரசு கோரும் என்று இலங்கை அதிபர்சந்திரிகா கூறியுள்ளார்.

கொழும்பில் புதன்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அரசியல் சட்டசீர்திருத்தம் தொடர்பாக ஆளும் மக்கள் கூட்டணிக்கும், முக்கிய எதிர்க்கட்சியானஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை திருப்திகரமானவகையில் சென்று கொண்டுள்ளது. இறுதிச் சுற்றுப் பேச்சு வார்த்தை வியாழக்கிழமைநடைபெறும்.

இழுபறியாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கானஅமைதிப் பேச்சுவார்த்தையை அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்புடன்தான்துவக்கினேன்.

நமது எதிர்கால சந்ததியினர் பயங்கரவாதத்தின் நிழலைக் கூட பார்க்கக் கூடாது என்றநோக்கத்தில்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டி வருகிறேன் என்றார்அவர்.

கடந்த மார்ச் மாதம் எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழர் கட்சிகளுடன் அமைதி உடன்பாடுகாண்பது தொடர்பான பேச்சுவார்த்தையை அதிபர் சந்திரிகா துவக்கினார்.

தற்போது தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் விதத்தில்அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்திரிகா முடிவு செய்துள்ளார். இந்த மாதஇறுதியில் சட்டத் திருத்த வரைவு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+