யோகம் பயிலுவோம்
ரஷியா வழங்கும் சுகோய் போர் விமானங்களில் நவீன என்ஜின்கள்
மாஸ்கோ:
ரஷியாவிடமிருந்து இந்தியா வாங்கவுள்ள சுகோய் -30 வகை போர் விமானங்களில்,உலகிலுள்ள போர் விமானங்கள் எதிலும் இல்லாத அதி நவீன என்ஜின்பொருத்தப்படவுள்ளது.
சுகோய் விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் மிகயீல்போகோசின் கூறுகையில், இந்தியாவுக்கு சுகோய் -30 எம்.கே.ஐ. ரக போர்விமானங்கள் 50 வழங்கப்படும். இவற்றில் ரஷியாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீனஏ.எல்-31எப்பி ரக என்ஜின்கள் பொருத்தப்படும். இந்த வகை என்ஜின்கள்உலகிலுள்ள வேறு எந்த போர் விமானத்திலும் இல்லை.
இந்தியாவிற்கு ஏற்கனவே 18 சுகோய் போர் விமானங்களை ரஷியா வழங்கியுள்ளது.
2003-ம் ஆண்டுக்குள் 30 போர் விமானங்களும், அதற்கான உதிரி பாகங்கள்,பராமரிப்புக் கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டு விடும்.
பராமரிப்புக்காக இந்தியா வழங்கியுள்ள மிக்-21 ரக விமானங்களின் ஒரு பகுதிவிரைவில் சீர்படுத்தப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த கட்டமாக 123மிக் விமானங்கள் இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில்மேற்கொள்ளப்படும் என்றார்.
இதற்கிடையே, ரஷியாவின் விமானம் தாங்கிக் கப்பலான அட்மிரல் கோர்ஸ்கோவ்,இந்தியாவிடம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அக்டோபரில் ரஷிய அதிபர்புடின் இந்தியா வரும்போது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலை இலவசமாக தர ரஷியா முன்வந்துள்ளது. இருப்பினும் கப்பலை சரிசெய்வது மற்றும் புதுப்பிப்பது போன்றவற்றிற்கான செலவுகளை இந்தியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications