வளர்ச்சி குழுவில் பி.டி.உஷா: இனியாவது "ஓடுமா" விளையாட்டுத்துறை?
டெல்லி:
இந்தியாவில் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் தேசிய விளையாட்டு வளர்ச்சி நிதி கவுன்சிலை மத்திய அரசுஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் உறுப்பினர்களாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுககுப் பெருமை சேர்த்த பி.டி.உஷா, பர்கத் சிங், பிஷன்சிங் பேடி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை விட மிகச் சிறிய நாடுகள் எல்லாம் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம்பதக்கங்களைக் குவித்து வருகின்றன. ஆனால் நிலப் பரப்பில் பெரியதும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்டநாடுகளில் இரண்டாம் இடமும் வகிக்கும் இந்தியா, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க அளவில்பதக்கங்களைப் பெறவில்லை.
பி.டி. உஷா, குஞ்சராணி, ஜஸ்பால் ராணா, பர்கத் சிங், விஸ்வநாதன் ஆனந்த், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி போன்றவர்கள்தனிப்பட்ட முறையில் காட்டிய ஆர்வம் மற்றும் ஈடுபாட்டால் அவர்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றனர்.
அந்த வகையில் இந்தியாவுக்கு விளையாட்டு உலகில் சர்வதேச அளவில் புகழ் சேர்த்த வீரர் மற்றும் வீராங்கனைகளைஉறுப்பினர்களாகக் கொண்டு தேசிய விளையாட்டு வளர்ச்சி நிதி கவுன்சிலை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இக் கவுன்சிலுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தீன்ஷா தலைவராகவும், மத்திய விளையாட்டுத் துறைஇணை அமைச்சர் ஷானவாஸ் உசேன் துணைத் தலைவராகவும் இருப்பர்.
மொத்தம் 19 பேர் கொண்ட இக் கவுன்சிலில் தொழிலதிபர் ராகுல் பஜாஜ், பஞ்சாப் நேஷனல் வங்கித் தலைவர் எஸ்.எஸ்.கோலி, இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எம்.ஏ. பத்தான், ஹட்கோ தலைவர் வி. சுரேஷ், பி.டி. உஷா, பிஷன் சிங் பேடி, பர்கத்சிங், குஞ்சராணி, ரந்தீர் சிங், தோய்பா சிங், ஜொகீந்தர் சிங் செய்னி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, அரசு அதிகாரிகளைக் கொண்ட செயற்குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் கொண்ட இந்த செயற்குழுவில் ஒரேவிளையாட்டுத் துறையைச் சேர்ந்த நபராக பி.டி.உஷா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த செயற்குழுவுக்கு விளையாட்டுத் துறைச் செயலர்என்.என். கன்னா தலைவராக இருப்பார்.
3 ஆண்டுகள் வரை இந்த கவுன்சிலும், செயற்குழுவும் பொறுப்பில் இருக்கும். அதன் பிறகு புதிய உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications