தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

புலிகளைத் தொடர்ந்து மான்களுக்கு ஆபத்து...
ஒரிஸா விலங்கியல் பூங்காவில் தொடரும் அபாயம்

புவனேஸ்வரம்:

ஒரிஸா மாநிலத்தில் உள்ள நந்தன்கனான் விலங்கியல் பூங்காவில் புலிகளை அடுத்து மான்கள்இறக்கும் நிலையில் உள்ளன.

நந்தன்கனான் விலங்கியல் பூங்காவில் தற்போது 120 வகையான 1,300 விலங்குகள் உள்ளன.இதில் 70 மான்களும் அடங்கும். சமீபத்தில் தவறான ஊசிமருந்து செலுத்தப்பட்டதால் அரிய 7வெள்ளைப் புலிகள் உள்பட 11 புலிகள் இறந்துவிட்டன.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந் நிலையில், அந்த விலங்கியல் பூங்காவில்உள்ள மான்களுக்கு மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்குச் சரியான மருத்துவசிகிச்சை அளிக்காத பட்சத்தில் அவை இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புவனேஸ்வரத்தில் உள்ள ஒரிஸா கால்நடை அறிவியல் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள்தற்போது நந்தன்கனான் உயிரியல் பூங்காவுக்கு வந்து முகாமிட்டுள்ளனர். தற்போது எஞ்சியுள்ளபுலிகளுக்கு அவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மற்ற விலங்குகளையும் பரிசோதித்து வருகின்றனர் என்று விலங்கியல் பூங்காவின் இயக்குநர் பி.சி. புருஸ்டிதெரிவித்தார்.

இறந்துபோன புலிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் அவை இறந்ததற்கானமுழுமையான, உண்மையான காரணம் தெரியவரும்.

மேல் பரிசோதனைக்காக, இறந்துபோன புலிகளின் குடல் பாகங்கள் பெங்களூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று ஒரிஸா கால்நடை மருத்துவக் கல்லூரியின் நோய்க்குறியியல் துறை அதிகாரிஏ.டி. ராவ் தெரிவித்தார்.

ஒரிஸா மாநிலத்திலேயே மிகப் பெரிய இந்த நந்தன்கனான் விலங்கியல் பூங்கா, கடந்த ஆண்டுஅக்டோபர் மாதம் வீசிய கடும் சூறாவளிப் புயலை அடுத்து மூடப்பட்டது.

இம் மாதம் 20-ம் தேதி பூங்கா மீண்டும் திறக்கப்பட இருந்தது. ஆனால், சுற்றுச் சுவர், முள்கம்பி வேலி அமைக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பூங்கா திறக்கமேலும் தாமதமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+