தமிழகத்தில் இன்று
பிஜி நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியனர் புரட்சியாளர்கள்
சுவா:
பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 27 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள புரட்சிப்படையினரின் ஆதரவாளர்கள் சிலர் நாடாளுமன்றக் கட்டடத்தைவிட்டு வெள்ளிக்கிழமை வெளியேறினர்.
பிஜி தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் புரட்சிப் படையினர், கடந்த மே 19-ம் தேதி பிஜி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பிரதமர் உள்பட பலரைபிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.
அதன் பிறகு, பிஜியில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. ராணுவத்துக்கும், பிணைக் கைதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பிணைக்கைதிகளில் பலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் உள்பட 27 பேர் விடுவிக்கப்படவில்லை.
பிஜியில் பிஜி நாட்டவர்களைக் கொண்ட அரசு ஏற்படும் வரை அவர்களை விடுவிக்கமாட்டோம் என்று புரட்சிப்படையினர் கூறிவிட்டனர். இந் நிலையில்,சில நாட்களுக்கு முன்பு முழுவதும் பிஜி நாட்டவர்களைக் கொண்டு புதிய அரசு ஏற்படுத்தப்பட்டது. இந்தியர்கள் யாரும் அதில் இடம் பெறவில்லை.
புதிய ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, புரட்சிப் படையினருக்கு ராணுவ அரசு இரண்டு நாள் கெடு விதித்தது. பிணைக் கைதிகள் அனைவரையும்விடுவிக்கவேண்டும். ஆயுதங்களை ஒப்படைத்து நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ராணுவம் கூறியது.
வெள்ளிக்கிழமை இரவுடன் கெடு முடிவடைய உள்ள நிலையில், புரட்சிப் படையினரின் ஆதரவாளர்கள் சிலர் நாடாளுமன்றக் கட்டடத்தை விட்டுவெள்ளிக்கிழமை வெளியேறினர்.
நாடாளுமன்றத்தில் இன்னும் 80-க்கும் அதிகமான புரட்சிப்படையினரின் ஆதரவாளர்கள் இருப்பதாகவும், அவர்கள் சோர்ந்துவிட்டதாகவும் ராணுவஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு நாள் கெடுவுக்குள் புரட்சிக்காரர்கள் வெளியேறவில்லை என்றால் நாடாளுமன்ற கட்டடத்துக்கான மின் இணைப்பு, குடிநீர் சப்ளை போன்றஅத்தியாவசிய இணைப்புகளை துண்டித்து விடுவதாக ராணுவம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications