இதென்ன கலாட்டா...? கவாஸ்கரின் லாக்கர் பணம் எழுப்பும் குழப்பம்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ள சுனில் கவாஸ்கரின் வங்கி லாக்கரில் உள்ள பணம்குறித்து மும்பை ஜிம்கானா கிளப் பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான ரூபாய்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் லஞ்சமாகப் பெற்றதாக சமீபத்தில் புகார்கள் கூறப்பட்டுவருகின்றன. இது தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில், கவாஸ்கரின் வங்கி லாக்கரில் உள்ள பணம் குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற ஜிம்கானா கிளப் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு லாக்கரில் உள்ள பணம் குறித்து தகவல் தெரிவிக்க இருந்தார் கவாஸ்கர்.
ஆனால், வியாழக்கிழமை நடந்த கூட்டத்தை அவர் புறக்கணித்துவிட்டார்.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்த புகார்கள் எழுந்தவுடன் கவாஸ்கரின் வங்கி லாக்கரில் ஏராளமாக பணம் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதைகவாஸ்கரின் மனைவி மார்ஷ் நீல் மறுத்துள்ளார்.
கிரிக்கெட் வர்ணனையில் கவாஸ்கர் பிஸியாக உள்ளார். அவர் கிரிக்கெட் விளையாடப்படும் நாடுகளுக்குச் செல்வதும், வருவதுமாக உள்ளார். அவருக்குவங்கியில் பணம் போட நேரமில்லை. வங்கி லாக்கரில் ஒரு சில ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கும் என்றார் மார்ஷ் நீல்.
யு.என்.ஐ.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications