தமிழகத்தில் இன்று
கிராமங்களை மோத விட்டுப் பார்க்கும் குடிநீர்ப் பிரச்சினை
சென்னை:
கர்நாடகாவையும், கேரளாவையும் குறை சொல்லி என்ன பயன்?. சென்னைக்கு அருகே ஒருகிராமம், பக்கத்தில் இருக்கும் இன்னொரு கிராமத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது.
சென்னைக்கு அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் காடுவெட்டி என்ற வீரராகவபுரம்கிராமம் உள்ளது. திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் அடங்கிய கிராமம் இது. 40 ஆண்டுகளாகஇக்கிராமத்தில் குடி தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நிலத்தடி நீர் கூட குடிக்க முடியாத நிலை. காரணம் இங்குள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையின்கழிவுகளால் நிலத்தடி நீரும் மாசுபட்டு, குடிக்க முடியாத சுவையில் உள்ளது.
இதனால் இக்கிராமத்தில் குடிநீர் பிரச்னை மட்டுமல்ல, விவசாயம் முற்றிலும் பாதித்தது.இப்போது அந்த தொழிற்சாலை மூடப்பட்டு விட்டாலும், அதன் பாதிப்பு என்னவோஇக்கிராமத்தை விட்டு அகலவில்லை.
அதன் விளைவு மக்கள் குடிதண்ணீருக்காக அல்லல்படுகின்றனர். இந்த நிலைமை எல்லாம்இக்கிராமத்திற்கு மட்டும் தான். பக்கத்தில் உள்ள மேட்டுப்பாளையம் என்ற கிராமத்திற்குஎந்த பிரச்னையும் இல்லை. எனவே அங்கிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் தீட்டப்பட்டது.
திருவேற்காடு நகராட்சியில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வேலைகள் துவங்கின.ரூ.6 லட்சம் செலவில் திட்டம் தீட்டப்பட்டு இதுவரை 4.75 லட்சம் ரூபாய்செலவிடப்பட்டுவிட்டது. இரண்டு கிராமங்களையும் இணைக்கும் குழாய்கள், மேட்டுப்பாளையத்தில் மிகப் பெரியகிணறு என்று எல்லா பணிகளும் முடிவடைந்து விட்டன.
இச்சூழ்நிலையில் திடீரென்று மேட்டுப்பாளையம் மக்கள் பிரச்னையை கிளப்பினர். பக்கத்துகிராமத்திற்கு தண்ணீர் கொடுத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சுயநலத்தில்நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்கி விட்டனர்.
இரண்டு மாத காலமாக இந்த தடை உத்தரவால் திட்டப் பணி கிடப்பில் போடப்பட்டது. இரண்டுகிராமங்களுக்கும் இடையே இப்போது பகை மேகம் சூழத் துவங்கியுள்ளது.
தண்ணீர் தராத மேட்டுப்பாளையம் மக்கள், காடுவெட்டி வழியாக தான் வெளியூர்களுக்குசென்றாக வேண்டும். இதை பயன்படுத்தி போராட்டங்கள் நடத்துவதற்கான அறிவிப்புகள்வெளியிடப்பட்டுள்ளன. நடைபாதை தூரத்தில் இரு கிராமங்களும் இருந்த போதிலும் சுயநலப்போக்கால், சட்டம் ஒழுங்குப் பிரச்னைக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications