தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மீண்டும் ஆகாஷ் வெற்றிகரமாக பரிசோதனை

பலசூர் (ஒரிஸ்ஸா):

தரையிலிருந்து விண்ணிலுள்ள இலக்கைத் தாக்கும் நடுத்தர ரக ஆகாஷ் ஏவுகனையை இந்தியா சனிக்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது.

ஒரிஸ்ஸா மாநிலம் சந்திப்பூர் ஏவுகனைத் தளத்திலிருந்து ஆகாஷ் ஏவப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ஆகாஷ் சோதித்துப்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் சோதனை நடத்தப்பட்டது.

அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகனைக்குச் சமமானது ஆகாஷ். இந்திய நேரப்படி காலை 11.05 மணிக்கு அகாஷ் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

பல இலக்குகளைத் தாக்கும் விதத்திலும், 25 கிலோமீட்டர் தொலைவிலான இலக்குகளைத் தாக்கும் விதத்திலும் ஆகாஷ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1983-ம் ஆண்டு ஆகாஷ் ஏவுகனைத் தயாரிப்புத் திட்டம் துவங்கியது. ஆகாஷ் ஏவுகனையில் ராஜேந்திரா ரேடார் பொறுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில்40 முதல் 60 கிலோமீட்டர் தொலைவிற்குள் பறக்கும் 64 விமானங்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டது இந்த ரேடார்.

ஆகாஷ் வரிசையில் இது 9-வது சோதனை ஆகும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+