தமிழகத்தில் இன்று
"கூட்டணிப் பிரச்சினையை கருணாநிதி தீர்ப்பார்
சென்னை:
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை முதல்வர் கருணாநிதிதீர்த்து வைப்பார் என்று பாரதிய ஜனதா கட்சியின்அகில இந்திய துணைத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் சனிக் கிழமை கூடியது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனா.கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டி:
சென்னையில் நடந்த எதிர்க் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மூப்பனார், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
சிறுபான்மையினர் மீது எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் துணையாக இருப்பதாக உடனே கூறி விடுகின்றனர். இதுஆதாரமற்றது. எனவே மூப்பனார் போன்றவர்கள் பொது பிரச்னைகளை முழுமையாக புரிந்து கொண்டு பேச வேண்டும்.
வெளிநாட்டு விவகாரங்களில் பிரதமர் வாஜ்பாய் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இதை வெளிநாட்டுத் தலைவர்களே வெளிப்படையாகபாராட்டியுள்ளனர். பா.ஜ.க கூட்டணி நடவடிக்கைகளால் இந்தியாவில் பொருளாதார நிலைமை சீர்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களில் இந்தியா உன்னதநிலையை அடைந்து விடும்.
காஷ்மீர் மாநில சுயாட்சி பிரச்னைகள் தொடர்பாக அம்மாநில முதல்வர் பரூக் அப்துல்லா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக மாட்டார்.
காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசும், பிரதமரும் மிக நிதானமாக முடிவுகளை எடுத்து வருகின்றனர். எனவே அவர் எங்கள் கூட்டணியை விட்டுவெளியேற மாட்டார் என்று நம்புகிறோம். அப்படி வெளியேறினால் தடுக்க மாட்டோம்.
பா.ஜ.க .ஆட்சி பற்றி ஜெயலலிதா என்னவெல்லாமோ கூறி வருகிறார். முதலில் தன் மீதான லஞ்ச லாவண்ய வழக்குகளில் இருந்து அவர்வெளியேறட்டும். அப்புறம் எங்களைப் பற்றி பேசலாம்.
ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை கட்டுப்படுத்துவதிலும், ஒடுக்குவதிலும் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசும், முதல்வர் கருணாநிதியும்முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.
தமிழகத்தில் டாக்டர் ராமதாசும், வாழப்பாடி ராமமூர்த்தியும், அவர்களுக்கு இடையிலான கோபதாபங்கள் காரணமாக மாறுபட்ட கருத்துக்களைகூறி வருகின்றனர். இதனால் அவர்களுடைய அரசியல் எதிர்காலம் தான் பலவீனப்படும். கூட்டணிக்கு பாதிப்பில்லை. ஆனாலும், இந்த நிலைமைநீடிக்கக் கூடாது என்பது எங்கள் கருத்து.
இந்த கூட்டணியின் மூத்த தலைவர் என்ற முறையில் முதல்வர் கருணாநிதியே இதை தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications