தமிழகத்தில் இன்று
ஒரே இடத்தில் 12,000 ஊழியர்கள்... அலுவலகம் கட்டுகிறது மைக்ரோசாப்ட்
சியாட்டில்:
12 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் பணியாற்றும் வகையில் புதிய பெரிய அலுவலகம் கட்ட உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு அருகில் உள்ள ரெட்மாண்ட்டில் இந்த அலுவலகம் கட்டப்படவுள்ளது. இத் தகவலை, ரெட்மாண்ட் நகரத் திட்டப்பிரிவு அதிகாரி லூசி ஸ்லோமேன் தெரிவித்தார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இப் புதிய திட்டம் குறித்து பரிசீலித்து வருவதாகவும், விரைவில் அதற்கு அனுமதி தரப்படும் என்றும் அவர் கூறியதாகஅமெரிக்க பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், இதை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டான் லீச் மறுத்துள்ளார். ஊழியர்களுக்காக இப் புதிய கட்டடம் கட்டப்படவில்லை.தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குதாரர்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்து மைக்ரோசாப்ட் நிறவனத்தை இரண்டாகப்பிரிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால், பிரிந்து செல்லும் பங்குதாரருக்காக இப் புதிய கட்டடம் கட்டப்படுகிறது என்றார் டான் லீச்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications