தமிழகத்தில் இன்று
பூசலில் தவிக்கும் விக்கிரமசிங்கே கட்சி
கொழும்பு:
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைப் பதவி குறித்து பூசல் வெடித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் ஆகஸ்ட் 24-ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து இலங்கையில்அரசியல் சூழ்நிலை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் பூசல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை, அவசர நிலைசட்டத்தை நீட்டிப்பது தொடர்பான தீர்மான் வாக்கெடுப்பிற்கு வந்தபோது இது வெளிப்பட்டது. கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி, மூத்ததலைவர்களில் ஒருவரான ரோனி டி மெல், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இதேபோல கட்சியின் துணைத் தலைவரும் அதிபர் சந்திரிகாவின் தம்பியுமானஅனுரா பண்டாரநாயகவேவும் அதிருப்தியில் உள்ளார். விரைவில் நடைபெறவுள்ளநாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போட மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார்.
1977-ம் ஆண்டு முதல் 1988-ம் ஆண்டு வரை ஆட்சிப் பொறுப்பில் ஐக்கிய தேசியக் கட்சி இருந்தபோது அதில் நிதியமைச்சராக இருந்தவர் டி மெல்.அவர் கூறுகையில், அவசர நிலைச் சட்டத்தை நீட்டிப்பதை எதிர்த்து வாக்களிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்தது தேசத் துரோகம் ஆகும் என்றார்.இவர் விரைவில் அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணியில் சேருவார் என்று தெரிகிறது.
அதிருப்தியில் உள்ள அனுரா பண்டாரநாயகே கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் கூட்டணிக் கட்சிஆகியஇரண்டிலும் எதுவுமே இல்லை. இருகட்சிகளும் உருப்படாத கட்சிகள். இந்தக் கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவதை விட பேசாமல் இருக்கலாம் என்றார் அவர்.
டி மெல்லும், அனுராவும் முன்பு இலங்கை சுதந்திராக் கட்சியில் இருந்தவர்கள். இந்தக் கட்சி ஆளும் ஐக்கியகூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அங்கிருந்துஇரண்டு முறை விலகியுள்ளனர்.
தற்போது டிமெல், அனுரா ஆகியோரின் இந்தப் போக்குக்கு, கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கே மீதுள்ள அதிருப்தியே காரணம் என்று அரசியல்நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் விஜயபாலா மென்டிஸ், சரத் அமுங்கமா, நந்தா மேத்யூஆகியோர் மக்கள் கூட்டணிக்குத் தாவினர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இப்போதைய பலம் 80 ஆகும். மொத்தம் 225 பேர் கொண்டது நாடாளுமன்றம். 1994-ல்நடந்த பொதுத் தேர்தலின்போது, 94 இடங்களில் இக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால் இவர்களில் 7 பேர் சிலோன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.தேர்தல் முடிந்தவுடன், ஆளும் கூட்டணிக்குத் தாவி விட்டார்கள்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் பிளவு ஏற்பட்ட வருவது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இது அதிபர் சந்திரிகாவுக்கு தேர்தலில் சாதகமாக அமையும் என்ற கருத்து நிலவுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications