தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

வட கிழக்கு கவுன்சில் அமைக்க சந்திரிகா, விக்கிரமசிங்கே ஒப்பந்தம்

கொழும்பு:

வட கிழுக்கு மாகாண இடைக்கால கவுனசில் அமைப்பது தொடர்பான உடன்பாட்டில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும், முக்கியஎதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இருப்பினும் அமைதித் தீர்வு தொடர்பான அரசியல் சட்டத் திருத்த வரைவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் இருவருக்கும் இடையேஇன்னும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆகஸ்ட் 24-ம் தேதி நாடாளுமன்றத்தின் ஆயுள் முடிவதால், அதற்குள் வரைவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

வெள்ளிக்கிழமை வட கிழக்கு மாகாண கவுனசில் தொடர்பாக இருவருக்கும் இடையே நடந்த நான்கு மணி நேரப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் முடிந்தது.

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தொலைக் காட்சியில் அதிபர் சந்திரிகா பேசுகையில், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. மிகப்பரந்த மனப்பான்மையுடன், ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. புதிய வரைவுத் திட்டம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி தமிழர்கள்அதிகம் வசிக்கும் வட கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படும் கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும்.

புதிய அத்தியாயத்தைத் துவங்கியுள்ளோம். இதுதொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்றார்.

விக்கிரமசிங்கே பேசுகையில், நாட்டில் பிரிவினை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அதிகாரப்பகிர்வு குறித்து அதிபரும் நானும் பேச்சுவார்த்தைநடத்தினோம் என்றார்.

இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானுலும் கூட புதிய அரசியல் சட்டத் திருத்த வரைவுத் திட்டத்தை, நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்வதற்கான வழிமுறையில் இருவரும் வேறுபடுகின்றனர்.

இந்த சட்டமசோதவைத் தாக்கல் செய்தால் அதை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி தேவை. ஆனால் அதைச் சேகரிப்பதற்குகுறுகிய காலஅவகாசம் போதாது என்று எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கருதுகிறது. இதுதொடர்பாக மீண்டும் சந்தித்துப் பேச இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

இந்த அமைதித் திட்டத்தை ஏற்கனவே புலிகள் நிராகரித்து விட்டனர். இதுகுறித்து பரிசீலனை செய்வதற்கே வாய்ப்பில்லை என்று அவர்கள்திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+