தமிழகத்தில் இன்று
கணவரின் கண்களைத் தானம் செய்த அதிமுக பிரமுகரின் மனைவிக்கு ஜெ. நன்றி
சென்னை:
கணவர் இறந்த பிறகு அவர் உறுதியளித்தபடி கண்களை தானம் கொடுத்த அ.தி.மு.கபிரமுகரின் மனைவிக்கு ஜெயலலிதா நன்றிக் கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் கீழரதவீதியில்வசித்து வந்தவர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (வயது 49). இவர் மாவட்ட அ.தி.மு.ககைத்தறிப் பிரிவு துணை செயலாளராக இருந்தார். தீவிர ஜெயலலிதா விசுவாசியானஇவர், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை ஒட்டி தனது கண்களை தானம் செய்வதாகஉறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் அவர் திடீரென்று உடல் நலம் குன்றி இறந்து போனார். ஆனாலும்,கணவகரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது மனைவி அனுசுயா, மதுரைஅரவிந்த கண் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார். அங்கிருந்து கண் வங்கிகுழுவினர் விரைந்து வந்து, கிருஷ்ணமூர்த்தியின் கண்களை தானமாக எடுத்துச்சென்றனர்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அனுசுயாவுக்கு ஜெயலலிதா உருக்கமானநன்றிக் கடிதம் எழுதியுள்ளாார். ஜெயலலிதா கடிதம் வருமாறு:
என் பாலும், கட்சியின் பாலும் மிகுந்த ஆர்வம் கொண்டு பணியாற்றி வந்தகிருஷ்ணமூர்த்தியின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று.
என்னுடைய பிறந்த நாள் விழாவின் போது தன்னுடைய கண்களை தானம் செய்வதாககிருஷ்ணமூர்த்தி அறிவித்திருந்ததை செயல்படுத்திய தாங்கள் மற்றும் தங்களது மகன்பாலசுப்ரமணியன் ஆகியோரது கட்சிப் பற்றும், மன உறுதியும் என்னை மிகவும்நெகிழ்ச்சி கொள்ளச் செய்தது.
ஈடு செய்ய முடியாத இந்த இழப்பின் துயரத்தில் தங்கள் குடும்பத்தினருடன் நானும்பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்











Click it and Unblock the Notifications