தமிழகத்தில் இன்று
காளிமுத்துவுக்கு டாடா சுமோ....ஜெ.வின் பிறந்த நாள் பரிசு
சென்னை:
அ.தி. மு.க அவைத் தலைவர் முன்னாள் அமைச்சர் கா.காளிமுத்துவுக்கு சனிக் கிழமை58வது பிறந்த நாள். அவருக்கு "டாட்டா சுமோ காரை பிறந்த நாள் பரிசாக அளித்துவாழ்த்தினார் ஜெயலலிதா.
எம்ஜிஆர் ஆட்சியின் போது அ.தி.மு.கவில் விவசாயத் துறை அமைச்சராக இருந்தவர்காளிமுத்து. அதன் பின்னர் கட்சி இரண்டாகி ஜெயலலிதா, ஜானகி அணிகள் என்றுபிளவுபட்டு நின்றபோது ஜானகி அணியில் இருந்தவர். அதன் காரணமாகஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளானவர்.
அதன் பின்னர் ஜெயலலிதா தலைமையில் கட்சி ஒன்றுபட்ட போதும் காளிமுத்துவுக்குகட்சியில் மரியாதை கிடைக்கவில்லை. அந்த கோபத்தில் கருணாநிதி தலைமையைஏற்று தி.மு.கவில் சேர்ந்தார். தி.மு.கவில் அவருக்கு உரிய மரியாதை தரப்பட்டது. ஊர்ஊராக சென்று ஜெயலலிதாவை பற்றி கடுமையாக பிரச்சாரம் செய்தார்.
மீண்டும் ஜெயலலிதா தலைமையை ஏற்று அ.தி.மு.கவுக்கு போக மாட்டேன் என்றுசத்தியம் செய்தார். "கருவாடு மீனாகாது கறந்த பால் மடி புகாது என்று அவரதுபாணியில் அடித்துச் சொன்னார். ஆனால், தி.மு.க.வில் சில மாதங்கள் கூட அவர்தாக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் ஜெயலலிதாவிடம் வந்து சேர்ந்து கொண்டார்.இப்போது அ.தி.மு.க வின் அரசியல் தெரிந்தவராக நடந்து கொள்கிறார்.
ஜெயலலிதா புராணத்தை தவிர வேறு எந்த விஷயத்தை பற்றியும் அவர் மேடைகளில்வாய் திறப்பதில்லை. அதனால் அவருக்கு அ.தி.மு.க.வில் இப்போது முக்கிய இடம்தரப்பட்டுள்ளது. நெடுஞ்செழியன் மறைவுக்கு பின்னர் காலியாக இருந்த அவைத்தலைவர் நாற்காலியில் அவரை அமர்த்தி வைத்துள்ளார் ஜெயலலிதா.
அ.தி.மு.க.வில் இன்னொரு நெடுஞ்செழியனாக வலம் வரும் காளிமுத்து சனிக்கிழமை58வதுபிறந்த நாள் கொண்டாடினார். அவருக்கு பிறந்த நாள் பரிசாக "டாட்டா சுமோகார் ஒன்றை பரிசளித்தார் ஜெயலலிதா. அ.தி.மு.க சார்பில் அந்த கார்வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications