தமிழகத்தில் இன்று
உயிரையும் பொருட்படுத்தாமல் மாடு கடத்தலைத் தடுத்த தாமரைக்கனி
ஸ்ரீவில்லிப்புத்தூர்:
கேரள மாநிலத்திற்கு அடிமாடுகளை கடத்திச் சென்ற லாரிகளைத் தடுக்க முயன்ற அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனியை லாரியை ஏற்றிக் கொல்ல சிலர்முயன்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ தாமரைக்கனி, வத்திராயிருப்பு என்ற இடத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.அவருடைய கார் இந்திரா நகர் விலக்கு அருகே வரும் போது இரண்டு லாரிகளில் மாடுகள் கடத்தப்படுவதைப் பார்ததார்.
இதையடுத்து லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினார்.
அவை நிற்காததால் அதை விரட்டிச் சென்று ஸ்ரீ வில்லிப்புததூர் அருகே லாரிகளை மடக்கினார். அப்போது ஒரு லாரி வேகமாக கடந்து சென்று விட்டது. ஒருலாரி மட்டும் பிடிபட்டது.
மற்றொறு லாரியையும் நிறுத்துவதற்காக ஆட்டோவில் விரட்டிச் சென்ற தாமரைக் கனி, லாரியின் முன் சென்று ஆட்டோவுடன் நின்றார். ஆனால்லாரியை நிறுத்தாத டிரைவர், ஆட்டோ மீது ஏற்ற முயன்றார். ஆனால் அப்போது எதிர் திசையில் வேறொரு வாகனம் வந்ததால் ஆட்டோ மீது லாரிமோதுவது தடுக்கப்பட்டது. இதனால், தாமரைக்கனி உயிர் தப்பினார்.
வீர, தீரத்துடன் லாரியை நிறுத்திய தாமரைக்கனி, போலீஸ் நிலையத்துக்கு லாரியை கொண்டு வந்தார்.அதற்குள் அங்கு மக்கள் கூடி விட்டனர். தாசில்தார்ரங்கமணி வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது மேலும் 3 லாரிகள் மாடுகளுடன் கடந்து சென்றன. அவற்றையும் தாமரைக்கனி மறித்துநிறுத்தினார்.
விருதுநகர் கலெக்டருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடிமாடுகள், கறிக்காகக் கடத்தப்படுவதைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பிடிபட்ட 5 லாரிகளில் மொத்தம் 200 -க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. கடந்த மாதம் பிரதமருக்கு பேக்ஸ் அனுப்பிய தாமரைக்கனி, ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் பல இடங்களிலிருந்து கேரளாவிற்கு அடிமாடுகள் கறிக்காக கடத்தப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். பதில் அனுப்பிய பிரதமர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications