தமிழகத்தில் இன்று
பிரான்ஸுடன் சேர்ந்து பீரங்கி தயாரிக்கிறது சவூதி நிறுவனம்
துபாய்:
சவூதி அரேபியால் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று பிரான்ஸ் நாட்டுடன் கூட்டு சேர்ந்து பீரங்கி தயாரிப்பில் ஈடுபட உள்ளது.
இத் தகவலை சவூதி அரேபியாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
பிரான்ஸுடன் சவூதி அரேபியா கூட்டு சேர்ந்து பீரங்கி தயாரிக்க உள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாயின. இச் செய்தியை அவர் மறுத்து மேற்கண்டதகவலை தெரிவித்தார்.
பீரங்கி தயாரிப்பு தொடர்பாக பிரான்ஸுடன் சவூதி அரேபியா அரசு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. தனியார் துறை நிறுவனம்தான் ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பீரங்கி வாங்குவது தொடர்பாக இதுவரை எந்த ஒப்பந்தத்தையும் சவூதி அரேபியா செய்து கொள்ளவில்லை. இனிமேலும் அத்தகையஒப்பந்தமும் செய்து கொள்ளாது.
தனியார் துறை ஒத்துழைப்புடன் பீரங்கிகளைத் தானே தயாரிக்க சவூதி அரேபிய அரசு விரும்புகிறது. பிரான்ஸுக்கும், தனியார் துறை நிறுவனத்துக்கும்இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் சவூதி அரேபிய அரசின் பங்கு ஏதும் இல்லை என்றார் அவர்.
கடந்த ஜூன் மாதம் பிரெஞ்சு பாதுகாப்புத் துறை அமைச்சர் அலைன் ரிச்சர்டு, சவூதி அரேபியா வந்திருந்தார். அப்போது அந் நாட்டின் உள்ள தனியார் துறைநிறுவனங்களின் தலைவர்களிடன் அவர் பேச்சு நடத்தினார். அப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பீரங்கி தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications