வீனஸ் வில்லியம்ஸ் விம்பிள்டன் சாம்பியன்
விம்பிள்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பட்டத்தை அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மற்றொரு அமெரிக்க வீராங்கனையும் நடப்புச் சாம்பியனுமான லின்ட்ஸே தேவன்போர்ட்டை 6-3,7-6 (7-3) என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்தார்.
வீனஸ் வில்லியம்ஸ் பெறும் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் செட்டில் தேவன்போர்ட்டின் இரு சர்வீஸுகளை முறியடித்து 6-3 என்ற கணக்கில் அந்த செட்டை எளிதாக வென்றார் வீனஸ் வில்லியம்ஸ். ஆனால்,இரண்டாவது செட்டில் தேவன்போர்ட் விட்டுக் கொடுக்காமல் ஆடினார்.
அதனால், இருவரும் 6-6 என்ற சமநிலையில் இருந்தபோது டை-பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் 7-3 புள்ளிகள் எடுத்து வென்று அந்தசெட்டை 7-6 என்ற கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ் பெற்றார்.
வீனஸ் வில்லியம்ஸிடம் தோற்றதை அடுத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைப் பெறும் வாய்ப்பை தேவன்போர்ட்இழந்தார்.
இந்த ஆண்டு விம்பிள்டனில் வீனஸ் வில்லியம்ஸ் பெறும் இரண்டாவது பட்டம் இது. ஏற்கெனவே தனது சகோதரி செரீனா வில்லியம்ஸுடன் சேர்ந்துபெண்கள் இரட்டையர் பட்டத்தையும் வீனஸ் வில்லியம்ஸ் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆண்கள் இறுதி ஆட்டத்தில் பீட் சாம்ப்ராஸும், பாட்ரிக் ராப்டரும் மோதுகின்றனர். இந்த ஆண்டு சாம்பியன்பட்டத்தை சாம்ப்ராஸ் வென்றால் அது அவருக்கு 13-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
இதுவரை ஒரே ஒருவர்தான் 13 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். பீட் சாம்ப்ராஸ் வென்றால் அச் சாதனையை அவர் சமன் செய்வார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications