தமிழகத்தில் இன்று
நடிகை பானுமதி பா.ஜ.க. இலக்கியப் பிரிவு துணைத் தலைவராக நியமனம்
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கலை இலக்கிய பிரிவு துணை தலைவராக பழம்பெரும் நடிகை பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போதைய ஊர்வசி போல் அந்த காலத்தில் நடித்து, பாடி அசத்தியவர் பானுமதி. அவரது இனிய பாடல்கள் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
அவரது திறமையை பாராட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகியாக நியமித்தது தமிழக அரசு. தற்போது அரசியல் ஆர்வம் காரணமாகபாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க.வின் கலை இலக்கிய அணியின் துணைத் தலைவராக அவரை, மாநிலத் தலைவர் கிருபாநிதி நியமித்துள்ளார்.
இந்த அணியின் தலைவராக கவிஞர் சுபாஷ், பொதுச் செயலாளராக முகில் குன்றன், செயலாளராக ராமமூர்த்தி, ரங்கநாதன், சிதம்பரம், பாவை ராமன்,செயற்குழு உறுப்பினர்களாக வெங்கடேசன், இசையமைப்பாளர் டி.கே.மூர்த்தி, கவுசல்யா சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications