தமிழகத்தில் இன்று
அமராவதியில் ஆரம்பித்து அமர்க்களம் வரை, ஆசை நாயகன் அஜீத் கடந்து வந்த பாதை, ரெட்கார்பட் விரிக்கப்பட்ட பாதையல்ல. ஆங்காங்கே முட்களும், சில இடங்களில் புற்களும் நிறைந்த ஒருவறட்டுப் பாதை.
ஆசையில், அஜீத் எழுந்து நின்றார். அதை காதல் கோட்டை தக்க வைத்தது. வாலியில் விஸ்வரூபம்எடுத்தார். அமர்க்களத்தில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தினார்.
இளம் கதாநாயகர்கள் வரிசையில் இப்போது அஜீத்திற்கு முதலிடம். தெலுங்குப் படமான பிரேமதபஸுதான், அஜீத்தின் திரையுலக நுழைவாயில். அமராவதியில் இவர் அறிமுகமானாலும் அதிகம்கவனிக்கப்படவில்லை. ஆசைதான், அஜீத்தை வெளிப்படுத்தியது. அதற்குப் பிறகு கதைகளில் அதிககவனம் செலுத்தாததால், பல படங்கள் தோல்வி கண்டன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உல்லாசம்படுத்துக் கொண்டது. இதையடுத்து சுதாரித்துக் கொண்டார் அஜீத். வாலியில் தன்னை நிலைநிறுத்தினார்.
விஜய்க்கு ஒரு காதலுக்கு மரியாதை போல, அஜீத்தை நட்சத்திரமாக மாற்றியது வாலி. இன்னொருசூப்பர் ஸ்டார் தமிழுக்குக் கிடைத்தார். ஆனால் ஷாலினியைத் திருமணம் செய்த பிறகு வெளிவந்த உன்னைக்கொடு என்னைத் தருவேன் படுதோல்வியைக் கண்டுள்ளது. திருமணத்திற்குப் பின் மார்க்கெட் டவுன் என்றதொற்று வதந்தி, அஜீத்தையும் பற்றிக் கொண்டு விட்டதா? அவரிடமே கேட்டோம்....
இப்படி ஒரு படத்தை எப்படி ஒப்புக் கொண்டீர்கள்...?
ஒரு படத்தின் வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் என்று கூற மாட்டேன். அதே போல,தோல்விக்கும் நான் மட்டுமே காரணமல்ல. டைரக்டர் படத்தின் கதையை விளக்கியபோது,நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் படமாக்கப்பட்டபோது மிகவும் அதிருப்தியாக உணர்ந்தேன்.இருப்பினும் புதிய டைரக்டரை மனம் நோக வைக்க விரும்பவில்லை. என்னைப் பொருத்தவரை, இப்படிஒரு படத்தைக் கொடுத்ததற்காக ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே டைரக்டருக்கு வீடு வாங்கித் தரப் போவதாகசெய்திகள் வந்ததே...?
அதெல்லாம் உண்மையில்லை. என்னை இயக்கி வெற்றி காணும் டைரக்டர்களுக்கு நான் கார்கொடுப்பது வழக்கம். அதுபோல நீங்களும் கார் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது என்று மட்டுமேடைரக்டர் கவி காளிதாஸிடம் கூறினேன். வீடெல்லாம் வாங்கித் தருவதாக கூறவில்லை.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் உங்களது கேரக்டர் குறித்து ரசிகர்கள் அதிருப்தியில்உள்ளனர். ஏன் இந்த ரோலை ஏற்றுக் கொண்டீர்கள்?
ரசிகர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் படத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான்ஒப்பந்தமாகி விட்டேன். அப்போது எனக்கு மார்க்கெட் கிடையாது. எனவே அந்தப் படத்தில் நான்இருக்கிறேன் என்பதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் ஆடியோ கேசட்வெளியீட்டின்போது, கமல் ஹாசன் என்னைத் தட்டிக் கொடுத்து அஜீத்தைப் பார்க்க பொறாமையாகஇருக்கிறது என்றார். ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன்.
புதுசா என்ன படம் இருக்கு..?
அடுத்த படம் சுப்பையாவின் சிட்டிஸன். சக்ரவர்த்தி தயாரிக்கிறார். இது கொஞ்சம் வித்தியாசமானபடம். மொத்தம் ஆறு கெட்அப்களில் வருகிறேன். எனக்கான மேக் அப் மேனை கமல்ஹாசன்தான்பரிந்துரை செய்தார். கல்யாண இன்விடேஷனைக் கொடுப்பதற்காக ஹே ராம் செட்டிற்குச் சென்றபோதுமேக் அப் மேனை அறிமுகப்படுத்தி வைத்தார்.
பிறகு, எழில், சூர்யா, பிரவீன் காந்த் ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு படம். பூர்ணசந்திர ராவின்தயாரிப்பில் ஒரு படம். இவர்தான் எனது முதல் தெலுங்குப் படத்தை தயாரித்தார். இந்தப் படத்தை வசந்த்இயக்குகிறார்.
நேருக்கு நேர் படத்தின்போது வசந்துக்கும், உங்களுக்கும் தகராறு வந்தது. இப்போது சேர்ந்து படம்பண்ணப் போகிறீர்கள். எப்படி..?
நேருக்கு நேர் தகராறையடுத்து வசந்த்திடம் உதவியாளராக இருந்த சூர்யாவை வைத்து வாலி படம்செய்தேன். ஆனால் தகராறை அப்போதே நான் மறந்து விட்டேன். வசந்துடன் சேர்ந்து ஒர்க் செய்வதில்எந்தப் பிரச்சினையுமில்லை என்று பகிரங்கமாகவே அறிவித்திருந்தேன். அதனால்தான் இப்போதையபடத்தை ஒத்துக் கொண்டேன். அவரது ஆசை படம்தான் எனக்குப் பெரிய பிரேக் கொடுத்ததல்லவா?
கவி காளிதாஸுடன் மீண்டும் சேருவீங்க..?
ஒரு வருடத்திற்குப் படம் ஏதும் செய்யாதீர்கள். அதற்குப் பிறகு நல்ல சப்ஜெக்டுடன் வாங்க என்றுகாளிதாஸிடம் கூறியுள்ளேன். தோல்விகள் நிரந்தரமல்ல. சூப்பர் குட் பிலிம்ஸ், சிம்ரன், நான்,எஸ்.ஏ.ராஜ்குமார் என பெரிய தலைகள் இருந்தும் படம் தோல்வியடைந்துள்ளது. இதற்கு என்னகாரணம் என்று தெரியவில்லை. இதிலிருந்து வெளிவருவது அவருக்கு மிகவும் கடினம்.
இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் குறித்து ஐடியா இருக்கிறதா...?
நிச்சயமாக இல்லை. இரண்டு ஹீரோக்களும் தீனி போடுவது யாரால் இப்போது படம் எடுக்கமுடியும். ஈகோ பிரச்சினைகள் வரும். அது மிகவும் சிரமம் என்கிறார் அஜீத்.
ஓ.கே. ஆஜீத். அடுத்த படத்தைப் பார்த்து செய்யுங்க..ஆல் தி பெஸ்ட்!
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications