தமிழகத்தில் இன்று
குஜராத்தில் Gun விற்கும் பெண்
ராஜ்காட் (குஜராத்):
ஆயுத விற்பனையிலும் புகுந்து விட்டார்கள் பெண்கள். குஜராத்தில்தான் இந்த ஆயுதப் பெண் இருக்கிறார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் தீப்தி திரிதேவி என்ற பெண், துப்பாக்கிகளை விற்பதற்கும், சர்வீஸ்செய்வதற்கும் தனக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரி மனுச் செய்தார். இது எஸ்.பிக்குப் புதுமையாக தெரிந்தது. இத்தனைக்கும்அந்தப் பெண் ஐந்து அடி உயரமே இருந்தார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆயுதங்களுக்கும் தொடர்பே இல்லை.
சிறு வயது முதலே ஆயுதங்கள் குறித்துஆர்வம் காட்டாதவர். இதை விட முக்கியமானது அவர் ஒரு பெண். இருந்தாலும் அவர் துப்பாக்கிவிற்க அனுமதி கோரியது, டிஎஸ்.பி. நீரஜ் கொட்டாகருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. தீப்தியின் மன உறுதியைப் பாராட்டிய அவர்அனுமதி கொடுத்தார்.
நீரஜ் கொட்டாகர் கூறுகையில், ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய இந்த வேலையில் எப்படி இவருக்கு ஆர்வம் வந்தது என்றுஆச்சரியமாக இருந்தது.
துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்கள் விற்பனை செய்யும் இந்த வேலையில் இவருக்குள்ள ஆர்வமும், துடிப்பும் வியக்க வைத்தது. இன்றையநிலவரப்படி இந்தியாவிலேயே துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களை விற்பனை செய்வது மற்றும் பழுது செய்வதில் ஈடுபட்டுள்ளமுதல் பெண்மணி இவர்தான் எனலாம் என்றார்.
இதுகுறித்து தீப்தி திரிவேதி கூறுகையில், வக்கீலான எனது கணவர் அசோக் திரிவேதிதான் என்னை ஊக்குவித்தார். அவரிடம்ரிவால்வரும் அதற்கான அனுமதியும் இருந்தது. அவரிடம் நான் துப்பாக்கி சுடுவதற்குக் கற்றுக்கொண்டேன். பின்னர் அதுவே எனதுபொழுதுபோக்கானது.
இதையடுத்து என் கணவர் என்னை துப்பாக்கி விற்பனையில் ஈடுபடுவதற்கான அனைத்து ஒத்துழைப்பும் கொடுத்தார். எங்களுக்குத்திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. இந்தத் தொழிலில் நான் முழு சந்தோஷத்துடன் ஈடுபடுகிறேன்.
துப்பாக்கி மற்றும் பிறஆயுதங்கள் விற்பனை செய்வதில் எனக்கு 7 வருட அனுபவம் உள்ளது என்றார்.
இதுகுறித்து அசோக் திரிவேதி கூறுகையில், முதலில் துப்பாக்கி விற்பனைக் கூடம் தனியாகத் திறப்பதில் எங்களுக்கு பயம் இருந்தது.ரெளடிகள் துப்பாக்கிகளை கொள்ளையடித்துச் சென்று விடலாம் என்ற அச்சம் இருந்தது. இதனால் எனது சட்ட அலுவலகத்திலேயேஉள்ள ஒரு பகுதியில் விற்பனைக்கூடம் அமைத்தோம்.
தீப்தியால் குடும்பத்தையும், வியாபாரத்தையும் எந்த விதப் பிரச்சனையும் இல்லாமல் கவனித்துக் கொள்ள முடிகிறது என்றார்.
ராஜ்கோட்டில் உள்ள தனது நிறுவனத்தை காலை முதல் மதியம் வரை திறந்து வைத்திருக்கிறார். பின்னர் பிற்பகல் இரண்டு மணிநேரஇடைவேளைக்குப்பிறகு மீண்டும் மாலையில் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அவர்களும் சில சமயங்களில் துப்பாக்கி சுடும் பயிற்சியில்ஈடுபடுகிறார்கள். தீப்திக்கு இதில் மகிழ்ச்சி. என் குழந்தைகள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சியாகவைக்கிறது. எனக்குப் பின் அவர்களும் இந்த துறையில் ஈடுபட வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications