தமிழகத்தில் இன்று
பெங்களூர் சர்ச்சில் குண்டுவெடிப்பு
பெங்களூர்:
பெங்களூரில் சர்ச் அருகே வெடிகுண்டு வெடித்தது. இன்னொரு சம்பவத்தில் ஓடிக் கொண்டிருந்த வேன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர்பலியானார்கள்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
பெங்களூரில் ஜெகஜீவன்ராம்நகரில் உள்ள செயின்ட்பால் கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை விழா நடந்தது. விழா முடிந்ததும் அதில் கலந்துகொண்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் சமயத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
குண்டுவெடிப்பில் ஆலயத்தின் கண்ணாடிகள் சுக்குநூறாய் உடைந்து நொறுங்கின. இதையடுத்து அங்கிருந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள்ஜெகஜீவன்ராம் நகர் போலீஸ் நிலையத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். 2ஆட்டோக்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் நகர போலீஸ் கமிஷனர் மடியாள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
சர்ச்சில் வெடித்த குண்டு வெளிநாட்டுக் குண்டாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
சிலிண்டர் வெடித்து வேன் எரிந்தது:
இன்னொரு சம்பவத்தில், மாகடி ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் மினர்வா மில் கேட் அருகேவந்து போது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. வேன் சுக்குநூறாய் உடைந்து சிதறியது.
இதில், எதிரே வந்த இன்னொரு வேனும் உடைந்து நொறுங்கியது. வெடித்துச் சிதறிய வேனில் இருந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இன்னொருவர்விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. வேன் வெடித்ததற்குக் காரணம் தெரியவில்லை. சிலிண்டராக இருக்கலாம் என்று போலீஸார்தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் தொடரும் குண்டுவெடிப்புகள்:
கர்நாடக மாநிலத்தில் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்களில் குண்டுகள் வெடித்து வருகின்றன. முன்பு குல்பர்காவில் வெடித்தது. கடந்த சனிக்கிழமை ஹூப்ளியின்புறநகர்ப்பகுதியான புனிதலூதரன் தேவாலயத்தில் குண்டுவெடித்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications