தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தமிழர் கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தையைத் துவக்குகிறார் சந்திரிகா

கொழும்பு:

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்ககுத் தீர்வு காண்பதற்கான அமைதித் திட்டம குறித்து தமிழர் கட்சிகளின்தலைவர்களுடன் இந்த வாரம் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஆலோசனை மேற்கொள்கிறார்.

திங்கள்கிழமை முதல் இந்த ஆலோசனை துவங்குகிறது. வட கிழக்கு மாகாண இடைக்காலக்கவுன்சில், தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துதமிழ் கட்சித் தலைவர்களுடன் அதிபர் சந்திரிகா பேசவுள்ளார்.

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகளுடன் கடந்த நான்கு மாதமாக, முதல்கட்டப் பேச்சுவார்த்தையை அதிபர் சந்திரிகா மேற்கொண்டு வந்தார். வெள்ளிக்கிழமைகையெழுத்தான ஒப்பந்தத்துடன் இந்தப் பேச்சுவார்த்தை முடிவடைந்தது. இதில் சில தீர்வுகள் குறித்து இருதரப்பினருக்கும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், அதிபர் சந்திரிகா தயாரித்துள்ள அரசியல் சட்டத் திருத்த வரைவுத் திட்டத்தைஏறக்குறைய அனைத்து தமிழர் கட்சிகளுமே எதிர்த்துள்ளன. இந்த அரசியல் சட்டத் திருத்தம்தமிழர்களின் நலன்களைப் புறக்கணிப்பதாக அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்,பேச்சவார்த்தையில் விடுதலைப் புலிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

இதேபோல, சந்திரிகாவின் அமைதித் தீர்வுக்கான திட்டத்தை விடுதலைப் புலிகளும் நிராகரித்துள்ளனர்.அழுகிய எலும்புகளைக் கொடுத்துத் தங்ககளைச் சமாதானப்படுத்த சந்திரிகா முயல்வதாக அவர்களதுலண்டன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஈழம் என்ற கோரிக்கையிலிருந்து விடுதலைப் புலிகள் இன்னும் விலகவில்லை. அதைத் தவிர வேறுஎதைக் கொடுத்தாலும் அவர்கள் ஏற்றக் கொள்ள மாட்டார்கள். எனவே விடுதலைப் புலிகளின்நிலையை மீறி, அதிபர் சந்திரிகாவின் அமைதித் திட்டத்தை தமிழர் கட்சிகள் ஏற்றுக் கொள்ளும்என்பது சந்தேகமே.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கட்சியின் துணைத் தலைவர் அனந்தசங்கரி கூறுகையில், அதிபர் சந்திரிகாவின்தற்போதைய அமைதித் திட்டத்தில் எங்களுக்குத் திருப்தியில்லை.

எங்களைத் திருப்திப்படுத்துவதை விட முதலில் விடுதலைப்புலிகளைத்தான் சந்திரிகா திருப்திப்படுத்த வேண்டும்.அவர்களைப் பேச்சுவார்த்தையில் சேர்க்காத வரை அமைதித் தீர்வு என்பது கானல் நீர் போன்றதே.

அமைதித் திட்டத்தை முதலில் புலிகளிடம் கொடுத்து அவர்களது ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் பிறகேநாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இரு சிங்களக் கட்சிகள் (ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி) மேற்கொண்ட திருத்தங்களை வைத்து 25 லட்சம தமிழர்களின் எதிர்காலம் குறித்து முடிவுசெய்வது பலனைத் தராது.

நான்கு மாதமாக சந்திரிகாவுக்கும், விக்கிரமசிங்கேவுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தை,எந்தப் பலனையும் தரவில்லை. முக்கியப் பிரச்சினைகளில் இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை.

தேர்தலுக்கு ஆணையம் தேவைஎன்று இப்போது யார் கேட்டது?. அதேபோல, வட கிழக்குமாகாணக் கவுன்சில் குறித்து வாக்கெடுப்பும் தேவையில்லாதது.

தமிழர்களுக்கு உண்மையிலேயே அதிக அதிகாரம் கொடுக்கும் வகையில் அமைதித் தீர்வு இருக்கவேண்டும். அதன் பிறகு விடுதலைப் புலிகளையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும்என்றார் அவர்.

இக்கட்சி திங்கள்கிழமை துவங்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமா என்பதும் சந்தேகமாகஉள்ளது. கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் திங்கள்கிழமைதான் லண்டனிலிருந்து திரும்புகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இக்கட்சியின் எம்.பி. நீலன் திருச்செல்வம், விடுதலைப் புலிகளின் மனிதவெடிகுண்டினால் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது இக்கட்சி புலிகளுக்கு ஆதரவாகமாறியுள்ளது.

இதற்கிடையே, தாங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதாக மக்கள் ஜனநாயக விடுதலைமுன்னணி அறிவித்துள்ளது. இக்கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகையில்,பேச்சுவார்த்தையில் பங்கேற்பதால், நாங்கள் அமைதித் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக அர்த்தம்இல்லை. அதற்காக எல்லாவற்றையும குருட்டாம்போக்கில் நிராகரித்து விட முடியாது.பேசுவோம். பிறகு பார்ப்போம் என்றார் அவர்.

தற்போதைய சூழ்நிலையில் புலிகளை ஒரு பிரதிநிதியாக அதிபர் சந்திரிகா அங்கீகரிக்காத நிலையில், தமிழர்கட்சிகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தை எந்தளவு பலன் தரும் என்று தெரியவில்லை. இருப்பினும் இந்தப்பேச்சுவார்த்தையின் இறுதியில், எட்டப்படும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால்எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+