தமிழகத்தில் இன்று
வளரும் நாடுகளில் புறக்கணிக்கப்படும் வயதான பெண்கள்
சிங்கப்பூர்:
வளர்ந்து வரும் நாடுகளில் வயது முதிர்ந்த பெண்கள், போதுமான கவனிப்பு இல்லாமல், சமுதாயத்தில்தனிமைப்படுத்தப்படுவதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் லிம் ஹென்க் கியாங் கூறியதாவது:
உலகம் முழுவதிலும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் எண்ணிக்கை 380 மில்லியனாக உள்ளது. 2020 ம்ஆண்டிற்குள் ஒரு பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 75 சதவீதம் பேர் வளர்ந்துவரும் நாடுகளில் வாழ்ந்து வருபவர்கள்.
வாழ்க்கை முறை, கல்வி, வருவாய், மகப்பேறு, உணவு முறை ஆகியவற்றைப் பொறுத்து அவர்கள் நோய்களால்தாக்கப்படுகிறார்கள். நோயால் தாக்கப்படும் பெண்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருதயக்கோளாறுகள், பக்கவாதம், புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்கள் இறுதியில் அதிகமனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்.
பெரும்பாலான வயது முதிர்ந்த பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் மார்பகப்புற்றுநோய் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் அதிக விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.
இவர்களில் சிலருக்கு கால்சியம் அதிக அளவு உள்ள ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை உண்ண வேண்டும்என்றும், அதனால் மார்பகப் புற்றுநோய் வராமல் தப்பிக்கலாம் என்றும் தெரிவதில்லை.
சிங்கப்பூரில் வாழந்து வரும் பெண்கள் மார்பகப் புற்றநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்குசிகிச்சை கொடுப்பதற்காக சிங்கப்பூரில் மூன்று அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் லிம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications